பின்பற்றுபவர்கள்

15 ஜனவரி, 2011

ஆரியல் சரோன்.. ஜோர்ஜ் குளோனி.. தமிழர்கள்,

செய்தி சொல்லும் செய்திகள் II

 
செய்தி சொல்லும் செய்திகள் II  ஆரியல் சரோன்.. ஜோர்ஜ் குளோனி.. தமிழர்கள் - GTNற்காக தேவன்

 
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் வாழும் நாட்டில் வெளியாகும் ஒரு பத்திரிகையில் வந்த சில செய்திகள் பற்றி எனது நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது அவர் பின்வருமாறு கூறினார்.
 
“உவன் செய்த அநியாயத்திற்குத்தான் கோமாவில கிடந்து அனுபவிக்கிறான் கடவுளாப்பாத்து கொடுத்த தண்டனை. உவன் இன்னும் அந்தரிக்கவேணும்”
 
யாரைப்பற்றி நண்பர் குறிப்பிடுகிறார் என நீங்கள் யோசிக்கிறீர்கள்!
 
இந்தக் கிழமையுடன் சரியாக ஜந்து வருடங்களாக இஸ்ரேலிய முன்னை நாள் பிரதமர் ஆரியல் சரோன் (Ariel Sharon) கோமாவில் இருக்கிறார்.  கடந்த ஜந்து வருடங்களாகச் செயற்கையான முறையில் உயிர்தரிக்க வைக்கப்பட்டுள்ள Ariel Sharon சரோன் பாலஸ்தினியர்கள் மீதான ஓடுக்கு முறைகளை தீவிரப்படுத்தியவர்.
 
எனது நண்பரின் கருத்துப்படி பலஸ்தீனியர்களுக்கு அவர் செய்த அட்டூழியத்திற்கு ஆண்டவன் கொடுத்த தண்டனையே அக் கோமா. எமது ஈழத்து அரசியலிலும் அவ்வப்போது இவ்வாறான எதிர்பார்ப்புக்களைக் கேட்கிறோம். 
 
அடாது செய்தவன் படாது படுவான்.. தன்வினை தன்னைச்சுடும்... இது போன்ற பழமொழிகள் எமது உணர்வுகளுக்கு வடிகாலமைத்துவிடுவதை அவதானிக்கிறோம்,
 
எனது நண்பனின் தர்க்கவியல் சரி என்றால் இலங்கையில் கோமா வந்து படுக்க வேண்டியபலரைப் பட்டியலிடலாம். மகிந்த, கோத்தபாய, சரத் பொன்சேகா, டக்லஸ், கருணா என அந்தப்பட்டியல் நீளும்!
 
விடுதலைப்புலிகளினால் பாதிக்கப்பட்டவர்களும் இவ்வாறானதொரு பட்டியலை வைத்திருக்கிறார்கள்.
 
உலக வரலாற்றில் தமது தவறுகளுக்காகவும் கொடூரமான அரசியல் செயற்பாடுகளுக்காகவும் தண்டிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள்தான். ஆனால் அவற்றுக்கெல்லாம் ஆண்டவன் தான் காரணம் என நான் நம்பவில்லை.
 
ஏனெனில் உலகின் மிகப் பெரியபயங்கரவாதிகளான அமெரிக்கத் தலைவர்கள் எல்லோரும் சகல செளகரியங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அல்லது சந்தோசமாகவே செத்துப் போயிருக்கிறார்கள்.
 
விடுதலைப் புலிகள் தாம் உயிர்ப்புடன் இருந்தவரை தமது அரசியல் எதிரிகளை ஆண்டவனைத் தண்டிக்க விடாமல் தாமே தண்டித்துக் கொண்டிருந்தார்கள்.
 
லலித், பிரேமதாச, காமினி, ராஜீவ் காந்தி என அவர்களின் தண்டனை பட்டியலில் பூர்த்தி செய்யப்பட்டவர்கள் மரணமடையாது இருந்திருந்தால் அவர்களின் தவறுகளுக்காக நியாயமான தண்டனைகளைப் பெற்றிருப்பார்களா என்பது மறுபுறத்தில் சந்தேகமே! 
 
உலக அரசியல் வரலாற்றில் ஆதிகாரஅரசியலில் தமக்கு சாதகமான இடங்களை எடுக்க முடியாதவர்கள், அதிகாரத்துடன் சமரசம் செய்து கொள்ள விரும்பாதவர்கள் அல்லது பலவீனமானவர்கள் தமது தவறுகளுக்கான  தண்டனைகளை சிலவேளைகளில் அடைகிறார்கள்.
 
போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சில ஆபிரிக்க அரசியல் மற்றும் இராணுவத்தலைவர்கள்,  முன்னைநாள் கம்யூனிசத் தலைவர்கள், சேர்பிய அரசியல் மற்றும் சில இராணுவத் தலைவர்கள் சர்வதேச நீதிமன்றறத்தின் முன் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.  ஆனால் பெரும்பாலான குற்றவாளிகள் அப்பாவிகளைத் தண்டித்துக் கொண்டு மூக்கும் முழியுமாக உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.
 
ஆரியல் சரோனின் பிழையான உணவுப்பழக்கம் காரணமாகவே அவரது மூளைக்கு குருதி வழங்கும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டது என்றும் அதனாலேயே கோமா ஏற்பட்டது என்றும் கூறிய போது என் நண்பனின் முகம் சற்றே இருண்டு போனது.
 
இன்னுமொரு செய்தியும் எங்களது உரையாடலுக்குக் களமானது.
 
அண்மையில் வெளியிடப்பட்ட வீடியோ செய்தி ஒன்றில் அமெரிக்க நடிகரான ஜோர்ச் குளோனி(George Clooney) பின்வருமாறு கூறுகிறார்.
 
“நாங்கள் கொங்கோவைத் தவறவிட்டோம் ருவண்டாவைத் தவறவிட்டோம் ஏன் டாவூரையும் தவறவிட்டோம்.   போர் தொடங்குவதற்கு முன்னம் அதை நிறுத்துவதற்கான சந்தர்ப்பம் இருந்திருக்கிறது என்பதை அறிந்திருந்தும் கொங்கோவிலும் ருவண்டாவிலும் டாபூரிலும் இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்குப் பிந்திவிட்டோம்"
 
இதனை அவர் “ The World is Watching (உலகம் அவதானித்துக் கொண்டிருக்கிறது)”என்னும் செயற்திட்டத்திற்கு உதவியளித்து வெளியிட்ட வீடியோச் செய்தியிலேயே குறிப்பிட்டார்.
 
இச் செயற்திட்டம் சூடானை மையப்படுத்தியே தொடங்கப்பட்டுள்ளது.
 
ஏதிர்வரும் திங்கட்கிழமை தென் சூடானில் சர்வசனவாக்கெடுப்பு ஒன்று நடைபெறவுள்ளது.  தென்சூடான் சூடானின் ஒருபகுதியாக இருப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் வாக்கெடுப்பே அதுவாகும்.
 
தென் சூடான்(கிறிஸ்தவ ஆபிரிக்க மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாகும்) நீண்ட காலமாக வடசூடானின் (அராபிய அரசியல் தலைமைகளால் நிர்வகிக்கப்படும்பகுதி) ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர்.   வட சூடானின் ஒடுக்குமுறையின் உச்சக்கட்டமாக சூடானின் டாவூர் மாகாணத்தில் கொடூரமான இனப்படுகொலைகள் கடந்த காலங்களில் நடந்தேறின.ஆனால் இது தொடர்பான தகவல்கள் மிகவும் காலம்கடந்தே உலகுக்கு தெரிய வந்தது. தற்போது நடைபெறவிருக்கும் சர்வசன வாக்கெடுப்புகாரணமாக சூடானில் மீண்டுமொரு வன்செயல் நிகழலாம் என உலகம் அஞ்சுகிறது "உலகம் அவதானித்துக் கொண்டிருக்கிறது-The World is Watching” என்னும் செயற்திட்டத்தின் கீழ் தெற்கு மற்றும் வடக்கு சூடான் எல்லையை கடந்து செல்லும் சகல வர்த்தகச்செய்மதிகளும் அந்தப் பிரசேதத்தில் பொதுமக்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகளையும் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகளையும் கண்காணிக்கும்,
அழிக்கப்பட்ட கிராமங்கள் குண்டு வீசப்பட்ட பிரதேசங்கள் மற்றும் செறிவான மனிதப் படுகொலைகள் நிகழக் கூடிய சாத்தியங்களை அவதானித்து இச்செய்மதிகள் தகவல்களைத்திரட்டும் இவ்வாறு திரட்டப்பட்ட தகவல்களையும் படங்களையும் கூகுள் மற்றும் இணையத்தளவடிவமைப்பு நிறுவனமான Trellon ஆகியவற்றின் உதவியுடன் ஜக்கிய நாடுகள் சபையின் செய்மதிச்செயற்திட்டம் (UNOSAT) ஆராய்ச்சி செய்து தெளிவான தகவல்களாக  www.satsentinel.org. என்னும் இணையத்திற்கு வழங்கும்.  இதன்மூலம் இணைய வசதி உள்ள எவரும் சூடானில் நிகழும் எந்த வன்முறையையும் 36 மணித்தியாலத்திற்குள் காணக்கூடியதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தச்செய்தியை வாசித்த பின்னர் எனது நண்பர் கேட்டார்: “முள்ளிவாய்க்காலையும் நாங்கள் தவறவிட்டுவிட்டோம்” என ஜோர்ச் குளோனி ஏன் சொல்லவில்லை”
 
அவருக்கு தமிழர்கள் என்றொரு இனம் இருப்பதே தெரிந்திருக்குமோ தெரியாது என்றேன்.
 
நாடுகடந்து இருக்கிற தமிழர்களிடம் சொல்லிக் குளோனியுடன் கதைக்கலாமே என்றார்.
 
நாடுகடந்த தமிழர்கள் பலகுழுக்களாகப் பிரிந்து தமக்குள் அடிபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒருவரை நாடினால் இன்னொருவருக்கு பிடிக்காதென்றேன்.
 
நாசமாய் போகவென்றார்!  என் நண்பர்.
 
GTNற்காக தேவன்
08/01/2011

10 ஜனவரி, 2011

இலங்கையுள் தமிழர்களின் வாழ்க்கை நம்பிக்கையிழந்து தனித்திருக்கிறது”

 
வளரும் இலங்கையுள் தமிழர்களின் வாழ்க்கை நம்பிக்கையிழந்து தனித்திருக்கிறது” ‐ விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்:‐
Thestar.com இல் வெளியான Rick Westhead  என்பவரால் எழுதப்பட்ட போருக்குபின்னான இலங்கை நிலவரங்கள் பற்றிய கட்டுரை குளோபல் தமிழ்ச் செய்திகளால் மொழிபெயர்க்கப்பட்டு கிளே தரப்படுகிறது  மொழிபெயர்ப்பு கீழே தரப்படுகிறது.
இக்கட்டுரையை அவர் “வளரும் இலங்கையுள் தமிழர்களின் வாழ்க்கை நம்பிக்கையிழந்து தனித்திருக்கிறது” என்னும் தலைப்பில் எழுதியிருக்கிறார்.
 வளரும் இலங்கையுள் தமிழர்களின் வாழ்க்கை நம்பிக்கையிழந்து தனித்திருக்கிறது”
 எங்களுடைய கொதலூப்பே கத்தோலிக்க தோவாலயத்தின் காற்றிலும் மழையிலும் கிடந்து பண்பட்ட பாவமன்னிப்பு கோரப்பயன்படும் திறந்தவெளி இருக்கை இந்த நாட்களில் நிரம்பி வழிகிறது.  இக் கடற்கரையோரத் தேவாயலத்தினை நோக்கி நிறைய மக்கள் பாவமன்னிப்புக் கோர வருகின்றார்கள் என யாராவது நினைத்தால் அது தவறாகும்.
வன்முறையும் பயமும் நிறைந்த கடந்த காலங்களில் இருந்து நம்பிக்கையைக் கட்டி எழுப்புவது எப்படி என அருட்தந்தை கிரித்தொன் அவுட்சோர்ன் நம்பிக்கை தொனிக்கக் கூறுவதைக் கேட்க‐ ஒரு மாற்றத்திற்காக மத நம்பிக்கை உடையவர்கள் அந்தத் தேவாலயத்தை வந்து நிறைக்கிறார்கள்.
இங்குள்ள மக்கள் எப்பொழுதும் ஒரே கேள்வியையே கேட்கிறார்கள் போலத் தோன்றுகிறது.  “அடுத்து இனி எங்களுக்கு என்ன நடக்கும்” என்பதேயது இம்மக்களுக்கு  மிக இலகுவாக “ஆழ்ந்த அனுதாபங்களை”மட்டும் வழங்கி விட முடிவதில்லை.
35 வயதான அருட்தந்தை கடந்து போன காலைப் பொழுதொன்றில் பின்வருமாறு கூறினார்.
இப்பொழுதும் இலங்கையில் வாழ்க்கை இலகுவானதாக இல்லைத்தான்  ஆனாலும் முன்பிருந்ததை விட நன்றாக இருக்கிறது.   “வருடக்கணக்காக நீங்கள் அமைதிக்காக பிராத்தித்தீர்கள் கடைசியாக அது உங்களுக்கு கிடைத்திருக்கிறது.  இது உங்களது பிராந்த்தனையின் பலன்” என நான் அவர்களுக்கு நினைவுபடுத்துகிறேன் .
அவுட்சோர்ன்னின் நினைவுபடுத்தல் எல்லா மக்களுக்கும் நம்பிக்கை தருவதாக இருக்கவில்லை.  சில இலங்கையர்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குவதற்கு கஷ்டப்படுகிறார்கள்.  ஒரு நச்சுத்தன்மையான வரலாற்றின் நீட்சியாக 1975 ம் ஆண்டு தொடங்கிக் கடந்த வருடம் மே மாதம் வரையும் நீடித்த உள்நாட்டுப் போர் 70000 ஆயிரம்பேரின் உயிரையும் காவு கொண்டு சமூகங்களையும் பிளவு படுத்திவிட்டுச் சென்றிருக்கிறது.
ஒரு புறத்தில் இந்தத் தீவுக்கு இந்தியாவின் தென்கரையில் இருந்து வரும் செய்திகள் குறிப்பிடத்தக்களவு சாதகமாகவே இருக்கின்றன.
இலங்கை அரசு வெளிநாட்டுநாணயவருமதி இலங்கையில் அதிகரித்துள்ளது என்றும் தற்கொலைத் தாக்குதல்களும் நிலவெடிகளும் கடந்த கால வரலாறுகளாக மாறிவிட்டன என்றும் கூறுகிறது.  பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தை விடக் குறையவில்லை எனவும் வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்து வருகிறது எனவும் நாணய மதிப்பிறக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அரசாங்கம் கூறுகிறது.சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட வரியிறுப்பாளர் கட்டமைப்பு புதிய வரி வருமானத்தை உறுதி செய்யும் எனவும் அது கூறுகிறது.
தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே வரக்கூடிய துயரக்கதைகள் அவர்களிடம் உள்ளது எனச் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியும் அமெரிக்கருமான கொ—மாத்தை கூறுகிறார்.
தென்னை மரங்களும் பனைமரங்களும் நிறைந்த இந்த தேசத்தின் பகுதிகளில் அரசு தரும் விம்பத்துக்கு மாறுபட்டதாக நீண்ட காலங்களாகப் பாடுகளைப்பட்ட மக்களிடம் வேறுவிதமான அனுபவங்கள் உள்ளதாக அவர்களை நேர்காணல் கண்டவர்கள் கூறுகிறார்கள்.  உணவுப் பொருட்கள், எரிபொருட்கள் என யாவும் இன்னும் உயர்ந்த விலையிலேயே உள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்.
உள்ளூராட்சி சபைகளுக்கும் மாகாண சபைகளுக்கும் அதிக அதிகாரங்களைப் பகிரப் போவதாக அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவே இல்லை என்கிறார்கள்.
உடைந்த வீதிகளையும் பாலங்களையும் இன்னும் உடைந்த மனங்களையும் திருத்தப் போவதாக இலங்கையின் சனாதிபதி சத்தியம் செய்கிறார்.  ஆனால் அபிவிருத்தி என்பது இலங்கையின் மேற்கிலும் தெற்கிலும் மட்டுமே செய்யப்படுவதாகச் சிலர் கூறுகிறார்கள். ஜிரின் இலங்கையின் பெரும்பான்மை இனமான சிங்கள் இனம் மட்டுமே இதனால் நன்மை அடைவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் தமிழர்களின் இதய நிலமான வடமானிலம் கைவிடப்பட்டதாக உள்ளது.  மேலும் வடமானிலத்தில் நடப்பவைகள் பற்றி  எதையும் அங்கு தொழில் புரியும் பத்திரிகையாளர்கள் அச்சம் காரணமாக அறிக்கையிடுவதில்லை.  அவர்கள் சுய தணிக்கையைப் பின்பற்றுகிறார்கள். அவர்களது வெளிநாட்டு நிறுவனங்களுக்கான அறிக்கையிடல் கடுமையாகத் தடுக்கப்பட்டுள்ளது.
வன்கூவரில் சண் சீ கப்பலில் வந்திறங்கிய 492 அகதிப்புகலிடக் கோரிக்கையாளர்களும் நான் மேற்குறித்த இலங்கையின் வடமானிலத்தை தமது வீடு என்கிறார்கள்.
இலங்கைத் தேசிய சமாதானம் பேரவையின் நிறைவேற்று அதிகாரி ஜெகன் பெரேரா அண்மையில் தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு மீளக் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களை பார்வையிடச் சென்றிருந்தார்.  அவர்களை அரசு எவ்வாறு மீள்குடியேற்றம்  செய்துள்ளது எனப் பார்ப்பதே அவரின் நோக்கமாகும்.
புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் யுத்தம் மூண்ட போது 300,000 க்கும் அதிகமான மக்கள் பலவந்தமாக அவர்களது வாழிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். தற்பொழுது 20000 மக்கள் மட்டுமே தமது “நலன்புரிமுகாம்கள்” என அழைக்கப்படும் முகாம்களில் இருப்பதாக அரசு கூறுகிறது.
A‐9 எனச் சொல்லப்படும் வடக்கு நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் இருந்து உள்ளிறங்கிப் பல கிலோ மீற்றர்கள் சென்ற பின்னரே மீள் குடியிருப்புத் திட்டம் ஒன்றைத் தான் அடைந்ததாக பெரேரா குறிப்பிட்டார். அந்த மக்கள் அடிப்படையில் சிறு குடில்களில் மின்சார வசதியோஇ கழிப்பறை வசதியோ எதுவும் இன்றி வசிக்க விடப்பட்டிருக்கிறார்கள் வேலை வாய்ப்புக்களுக்கான எந்த நம்பிப்கைகளும் இன்றிக் கைவிடப்பட்டிருக்கிறார்கள். இரவுகளின் கும்மிருட்டில் நச்சுப்பாம்புகளின் நடமாட்டம் பற்றி அவர்கள் அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கனடாவில் இருக்கின்ற எல்லாத் தமிழ் அகதிகளையும் அழைத்து வந்து இங்கு இவ்வாறு மீளக்குடியேற்றம் செய்ய வேண்டும் எனச் சொல்லச் சிலருக்கு மனம் வருகிறதை நினைக்கும் போது......
“கடவுளே இந்த மக்களுக்கு தற்காலிக ஓய்வையேனும் கொடுக்க முடியாதா” என நினைத்தேன்.
ஆனால் இலங்கைக்கு வருகிற ஒரு விருந்தாளிக்குப் பின்தங்கிய இந்தப் பகுதிக்கு வந்து இந்தத் துன்பமான காட்சிகளைக் காணவேண்டும் என்று என்ன தேவை இருக்கிறது.  அடிப்படை வசதிகளை இந்த மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்பதில்  இந்த நாடு இன்னும் எவ்வளவு பின் தங்கிய நிலையில் உள்ளது என்பதைக் காண அவர்களுக்கு வாய்க்காதுதான்!
இந்தமாதம் பொலிஸ் அதிகாரிகள் கொழும்பு வாழ் தமிழ் மக்களை மீண்டும் காவல் நிலையங்களில் வந்து தம்மைப் பதிவு செய்யுமாறு வலியுறுத்தியதாக கொழும்பில் இருந்து வெளியாகும் வீரகேசரிப் பத்திரிகை குறிப்பிட்டு இருந்தது.போர் முடிந்து ஒரு வருடங்களாகியும் இன்னமும் தமிழ் மக்கள் மீது காவல் துறை கொண்டுள்ள அவநம்பிக்கைத் தன்மையையே இந்த நடவடிக்கை சுட்டுவதாக தமிழ் அரசியல்வாதியான மனோ கணேசன் கூறுகிறார்.
கொழும்பில் இயங்கும் சியத ஒலி ஒளி பரப்புக் கூட்டுத்தாபனத்துள் முகமூடி அணிந்த காடையர்கள் சிலர் புகுந்து பணியாளர்கள் அனைவரையும் அடித்து நிறுவனத்திற்கு நெருப்பும் வைத்து சென்ற சில நாட்களின் பின்னரே தமிழ் மக்களைப் பதியக்கோரும் இந்த செய்தியை வீரகேசரி வெளியிட்டிருந்தது. ஜிரின் சியத ஊடக நிறுவனம் சனாதிபதித் தேர்தலில் தற்போதய சனாதிபதியின் எதிர்வேட்பாளரான சரத் பொன்சேக்காவை ஆதரித்ததன் மூலம் அரசின் கோபத்திற்கு ஆளாகி இருந்தது.
உயர் பாதுகாப்பு வலையத்தினுள் எல்லாவிடத்திலும் சோதனைச் சாவடிகள் நிறைந்திருந்த பகுதியில் அமைந்திருந்த அந்த ஊடக நிறுவனத்துள் 15 நிமிடங்களுக்கு மேலாக நின்று அட்டகாசம் புரிந்து விட்டு முகமூடி அணிந்தவர்கள் சென்று விட்டனர். இச் செயற்பாட்டை அவதானிக்கும் போது ஆயுதம் தாங்கிய, அளவுக்கு அதிகமான காவல் துறையினரால் கொழும்பு பாதுகாக்கப்படுகிற போதும் அது பாதுகாப்பாக இல்லை எனத் தெரிகிறது அல்லது சியத நிறுவனத்தின் மீதான தாக்குதல் இராணுவ அல்லது காவல்துறையினரின் ஆசியுடனேயே நடாத்தப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது என ஏசியன் ரிறிபியூன் தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இன்னும் சில மனித உரிமை ஆர்வலர்கள் த எக்கொனொமிஸ்ற் சஞ்சிகை கிரமமான முறையில் இலங்கைச் சுங்கத்திணைக்களத்தினால் தடைசெய்யப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.  இலங்கையில் நடக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் கட்டுரைகளை அந்தச்சஞ்சிகை பிரசுரிக்கும் போதெல்லாம் இவ்வாறு நடப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
யுத்தத்தின் இறுதி நாட்களில் நிகழ்ந்த விடையங்களை விசாரணை செய்ய விரும்பும் ஜக்கிய நாடுகள் சபையின் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் இலங்கை அரசு மறுத்து வருவதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
இலங்கையின் எதிர்காலத்தை எண்ணித் தான் கவலைப்படுவதற்கு பல காரணங்கள் இருப்பதாக பெரோரா கூறுகிறார்.  ஊடக சுதந்திரமின்மை அவற்றுள் ஒன்று என்கிறார் அவர்.
கடந்த மாதம் இலங்கையில் கொண்டு வரப்பட்ட அரசியல் அமைப்புத்திருத்த சட்டம் மூலம் தற்போதைய சனாதிபதி மூன்றாம் தடவையும் அதிகாரத்துக்கு வரக்கூடிய வழியை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.இவை மட்டுமின்றி நாட்டின் காவல்துறை அதிபர், உயர்நீதிமன்ற நீதிபதி ,மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர், மற்றும் தேர்தல் அதிகாரி போன்றவர்களை நியமிக்கவும் விலக்கவும் கூடிய அதிகாரத்தையும் சனாதிபதி பெற்றுக் கொண்டுள்ளார்.
அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுத்து அவை சரியாக தொழிற்படுகின்றனவா எனக் கண்காணித்து சமநிலையைப் பேணும் ஆட்சி அதிகார முறைமைகள் யாவும் உடைந்து வருகின்றன என பெரேரா கவலைப்படுகிறார்.
அதே வேளை சிறுபான்மை இனங்களுக்கு வழங்க வேண்டிய அரசியல் தீர்வு பற்றி எள்ளளவும் கவலைப்படாத போக்கே இங்கு நிலவுகிறது. காயங்களுக்கு மருந்து தடவுவதை விடுத்துக் காயங்களைப் பெரிதாக்கும் வேலையையே இந்த அரசாங்கம் செய்து வருவதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

பகுதி இரண்டு

இந்த நாட்டின் வளர்ச்சியைப் பல்லாண்டுகளாகத் தடுத்து நின்ற இரக்கமில்லாத பிரிவினைவாதிகளான விடுதலைப் புலிகளின் நகரமான யாழ்ப்பாணம் சன்னங்களால் துளைக்கப்பட்ட சிதைந்த கட்டிடங்களைச் சுமந்து நிற்கிறது.  இந்த நகரத்தில் இருந்த விடுதலைப்புலிகளின் நினைவுச் சின்னங்களையும் துயிலும் இல்லங்களையும் இலங்கை இராணுவம் அழித்துவிட்டதுடன் போரில் மடிந்த சிங்கள் இராணுவ வீரர்களுக்கு ஞாபகச் சின்னங்களையும் எழுப்பி வருகிறது.
ஜக்கிய நாடுகள் சபையின் ஆணைக்குழுவின் தலைவரும் கனடாவைச் சேர்ந்தவருமான நீல் புனே பின்வருமாறு கூறுகிறார்.
“இலங்கையின்  வடபுலத்துமக்கள் இந்தச் செயலினால்  மிகவும் கோபமடைந்திருக்கிறார்கள்.  நாட்டின் மொத்த இழப்பையும் குறிக்கும்  நினைவுச் சின்னமாக ஏதேனும் வைக்கப்பட்டால் அதனைப்பிழை சொல்லமுடியாது என அவர்கள் நினைக்கிறார்கள்”. ஜிரின் தமிழ் மக்கள் மிகத் துன்பமான  நரகத்தனமான காலத்தைக் கடந்து வந்திருக்கிறார்கள்.  மாவீரர் துயிலும் இல்லங்களை இடிப்பதும் இறந்து போன இலங்கை இராணுவ வீரர்களுக்கு சமாதி கட்டுவதும் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு உதவாது.  இவ்வாறு அரசாங்கம் செய்யத் தேவை இல்லை”
இலங்கையின் கிழக்கு நகரங்களான திருகோணமலையும் மட்டக்களப்பும் உள்நாட்டுப் போர் கொடூரமாக நடந்து கொண்டிருந்த காலங்களிலேயே 2004 ல் சுனாமியாலும் தாக்கப்பட்டது.
மட்டக்களப்பின் பிரதான வைத்திய சாலையில் தினமும் போராலும் சுனாமிலாலும் ஏற்பட்ட பாதிப்புக்களை வெளிப்படுத்தும் பெருந்தொகையான பெண்களைக் காணமுடிகிறது.
“ நாங்கள் தினமும் குறைந்தது பத்துப்பேரையாவது வைத்திய சாலையில் அனுமதிக்க வேண்டி ஏற்படுகிறது.போரின் பின் ஏற்பட்ட தனிமை, மற்றும் பல்வேறு காரணிகளால் மன அழுத்தத்துக்குள்ளான  தமது கணவன்மார்கள் மதுவையோ போதைப் பொருட்களையோ நாடுவதாக அந்தப் பெண்கள் தெரிவிக்கிறார்கள் என மனநலப் பராமரிப்பாளரான ஜெயதீப பதசிறீ தெரிவிக்கிறார்.
போர் முடிந்து 14 மாதங்களின் பின்பு ‐ போர் முடிந்து விட்டதாக அரசு அறிவித்து ஒரு மாதத்தின் பின்பு வாடகைக் கார் ஓட்டுனரான தனது கணவர் வேலைக்கு சென்ற பின் இன்றுவரையும் வீடு திரும்பவில்லை என ஒரு பெண் கூறினார்.  தன்னையும் தம்மகளையும் பார்த்துக் கையசைத்து இரவு வீடு திரும்புவேன் எனக் கூறிச் சென்ற கணவனை அந்தப் பெண் பிறகு காணவே இல்லை. கடத்தப்பட்ட 26 வயதான வாடகைக் கார் ஓட்டுனரின் தம்பி விடுதலைப்புலிகளின் உறுப்பினராகும்.  ஆனால் கடத்தப்பட்டவர் புலி அல்ல என ஜெயதீப பதசிறி கூறுகிறார்.
மண்ணிற ஊசியினால் இறுக்கப்பட்ட  நேர்த்தியான கொண்டையுடன் பழுப்பு மஞ்சள் சேலை அணிந்தபடி வேலைசெய்யும் பதசிறீ அரசாங்கப் படைகளே அந்தப் பெண்ணின் கணவனைக் கடத்திச் சென்றதாகவும் ஆனால் இப்படி ஆயிரம் கதைகள் உள்ளதாகவும் கூறுகிறார்.
யுத்தத்தின் பின்னான வாழ்வைக் கட்டி எழுப்புவதற்கு பலர் தடுமாறுவதாக பதசிறி சொன்னாலும் அதே நேரத்தில் பலர் தமது வாழ்வை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு விருப்பம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.  கடந்த பல வருடங்களாக கட்டியெழுப்ப முடியாமல் இருந்த வாழ்வை கட்டி எழுப்புவதற்கும் முன்னேறுவதற்கும்  அவர்கள் விளைகிறார்கள்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் அவர்கள் இருந்து காலங்களில் தனது வீட்டை திருத்திப் புதுப்பிக்க ஒருவர் முயற்சி செய்தால்  உடனேயே விடுதலைப் புலிகள் வந்து போராட்டத்திற்கு நிதி உதவி செய்யும்படி கோரிய சம்பவங்களையும் நினைவு கூறுகிறார்கள்.
வீட்டில் சன்னமிட்ட துளைகளை அடைக்க ஒருவரிடம் காசு இருக்கும் என்றால் போராட்டத்திற்கு பங்களிக்கவும் ஒருவரிடம் காசு இருக்கும் என அவர்கள் கருதினார்கள் என ஒரு உணவுக்கடை உரிமையாளர் ஒருவர் பெருமூச்சுடன் கூறினார். 2000ம் ஆண்டு வரையும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கில் தற்பொழுது மாயை இல்லாத நம்பிக்கையின் துளிகள் தோன்றியுள்ளன.
கொழும்பில் இருந்து கிழக்கு நோக்கிச் செல்ல வசதியற்ற சந்தோசமில்லாத ஒன்பது மணிநேரப் பயணத்திற்கு துணிய வேண்டியிருக்கிறது.  அந்தப் பயணத்தின் போது வீதியோரம் நிறைந்து கிடக்கின்ற இரும்புகளையும் சீமெந்து மூட்டைகளையும் காணமுடிகிறது.  திருகோணமலை மட்டக்களப்பு வீதி வரும் மாதங்களில் திருத்தப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ் வீதி திருத்தப்பட்டால்  திருகோணமலை மட்டக்களப்பு பயணம் 2 மணித்தியாலங்களாக சுருங்கிவிடும் எனக் கருதப்படுகிறது.
வர்த்தகம் கிழக்கில் தளைக்கத் தொடங்கியுள்ளது.  இந்தியாவின் எயர்ரெல் நிறுவனம் கிழக்கு மாகாணத்துள் நுளைந்துள்ளது. உள்ளூர் வியாபாரத்தை அது வளர்க்கிறது.  அண்மையில் யுனிலீவரின் அதிகார பீடம் இருபது உள்ளூர்  வினையோகத்தர்களுக்கு ஆற்றங்கரை விடுதி ஒன்றில் ஆடம்பர விருந்துபசாரம் ஒன்றைச் செய்திருந்தது.
யுனிலிவரின் தற்போதய மாதாந்த விற்பனை 500,000 டொலர்களுக்கும் மேலே என அதன் பிராந்திய முகாமையாளரான பசில் பெர்னான்டோ தெரிவித்தார்.  இரண்டு வருடங்களின் முன்பு தான் வந்த போது அது 280,000 டொலர்களாக இருந்ததாகக் கூறினார்.
பச்சைச் சேலை அணிந்து கால்களில் சலங்கை கட்டி உள்ளூர்ப் பாரம்பரிய தமிழ்ப் பாடலுக்கு இளம் பெண் நடனம் ஆடுவதைப் பார்த்தவாறு உள்ளூர் வினையோகத்தர்கள் தென்னஞ்சாராயத்தையும் கோழிக்கால்களையும் சுவைத்துக் கொண்டிருந்தனர். சுவரில் தொங்கிய பதாகையில் யுனிலீவரின் 10 ரூபா வெண்ணைக்கட்டி ‐குளிர்சாதனப்பெட்டி தேவைப்படாதது ‐மற்றும் புதிய லக்ஸ் சவர்க்காரச்கட்டி என்பவற்றின் விற்பனையை ஊக்கப்படுத்தும் விளம்பரம் காணப்பட்டது.
பெர்னான்டோ அவை விரைவாகவும் அதிகமாகவும் விற்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இது மிகவும் செலவான விருந்து தான் ஆனால் வியாபாரத்திற்கு மிகவும் அவசியமானது எனச் சிரித்தபடி பதில் கூறினார்.  “சந்தை விகசிக்கிறது” என்கிறார்.
இவ்வாறான முன்னேற்றகரமான செய்திகள் திருகோணலைப் பகுதியில் இருந்தும் வருகின்றன.  சீமெந்துஆலை  மாஆலை மற்றும் மீன்பிடி என்பனவே இந்நகரத்திற்கு வேலை வழங்கும்  மூலங்களாகும். இராணுவம் தற்போதும் ரோந்து வருகின்ற போதும் வீதி நீளமும் காணப்பட்ட இராணுவக் காவல் அரண்கள் அகற்றப்பட்டது வாழ்க்கையை இலகுவாக்கி உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
உள்ளூர் மீனவர்கள் தற்போது இரவிலும் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.  போர் நடந்த காலத்தில் இது சாத்தியமற்று இருந்தது.
இராணுவம் உள்ளூர் மக்களிடத்தில்  தனக்கு இருக்கும் படிமத்தை திருத்துவதற்காக ஒரு புதிய அளிக்கை நிகழ்வை தொலைக்காட்சியூடாக ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளது.  அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சியான( America’s Got Talent)  “அமெரிக்கா விற்பன்னர்களைக் கொண்டுள்ளது” என்பதை ஒத்த நிகழ்ச்சி ஒன்றை அது ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளது.  இந்த நிகழ்ச்சியில் இராணுவத்தினர் ஆடல் பாடல் மற்றும் அளிக்கைகளில் தங்களுக்குள் போட்டியிடுவது நேரிடையாக ஒளிபரப்பு செய்யப்படும். இதன் மூலம் இராணுவத்தினரும் மக்களே என்னும் எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த விரும்புகின்றனர்.
28 வயதான கடற்கரையோர விடுதி ஒன்றின் முகாமையாளரான துசி பொன்னம்பலம் எதிர்காலத்தில் தனது விடுதியை விஸ்தரிக்க யோசிக்கிறார்.  10 அறைகள் கொண்ட இவ்விடுதியில் தங்குவதற்கு ஒரு இரவுக்கு 1500 ரூபா செலவாகிறது.
“எவ்வளவு காலம்தான் சண்டை பிடிக்கிறது. அதிலை ஒரு எதிர்காலமும் இல்லை” என்னும் பொன்னம்பலம் மேலும் சொல்கிறார். ஜிரின் 1990 ம் ஆண்டு இராணுவச் சோதனைச் சாவடியில் அவரது தகப்பனை இராணுவம் மறித்தது என்றும் அவரது தகப்பனார் தவறு எதுவும் செய்யவில்லை என்ற போதும் இராணுவத்திற்கு கொடுப்பதற்கு காசு எதுவும் வைத்திருக்கவில்லை என்பதால் இராணுவம் அவரைத் தலையில் சுட்டுக்கொன்றது .
“யாவும் ஒரு வகையில் அரசியல்தான் நாங்கள் கவலைப்பட்டுக் கொண்டு கடந்த காலத்திலேயே வாழலாம் அல்லது முன்னோக்கி நகரவேண்டும்.  நான் முன்னோக்கிச் செல்லவேண்டும் என நினைக்கிறேன்”. என்கிறார்.

பகுதி மூன்று

இலங்கையின் வடமாகாணம் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 க்கும் குறைவான பங்கையே இந்த வருடம் அளித்துள்ளது.  அரசாங்கத்தின் கணிப்பீடுகளின் படி வடபகுதியில் தற்போது பணப்புழக்கம் ஆரம்பித்துள்ளது.  யாழ்ப்பாணதிற்கு அருகாமையில் அமெரிக்கா லெவி( Levi’s )மற்றும் J.C. Penney  நிறுவனத்தின் தமிழ்வாடிக்கையாளர்களுக்காக புதிய ஜீன்ஸ்  தயாரிப்பு நிலையங்களை    ஆரம்பிப்பதற்கு முதலிட்டுள்ளது.  ஓகஸ்ற் மாத ரைம்ஸ் சஞ்சிகையின்படிக்கு A‐9 சாலைக்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள  உணவுக் கடைகளும் விடுதிகளும் உள்ளூர்த் தமிழர்களுக்குச் சொந்தமானவையாக இருக்கின்றன.
இந்தியா 850 மில்லியன் டொலர்களை குறைந்த வட்டியில் வழங்க உள்ளது.  வடக்கு கிழக்கை புனர் அமைப்பதற்கும் 50000 புதிய வீடுகளை அமைப்பதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறே சீனாவும் இலங்கை அரசின் கவனத்தைப் பெறுவதற்காக 500 மில்லியன் உதவித் தொகையை வழங்க உள்ளது.  புதிய துறைமுகங்கள் மின்னிலையம் மற்றும் கிழக்கில் ஒரு பிரதான வீதி என்பவற்றையும் திறப்பதற்கு அது பயன்படும் எனக் கூறப்படுகிறது.
வெளிநாட்டு முதலீடுகள் உள்வருகிறதுடன் தினமும் கொழும்பில் வெளியாகும்ஆங்கிலப் பத்திரிகைகளின் தலையங்கங்களை இவ்வாறான “நற்செய்திகள்” நிறைந்தும் வருகின்றன.  அதேவேளை சில இலங்கையர்கள் ராஜபக்ஸ அரசின் அதிகாரத்தின் மீதுள்ள மோகத்தை எண்ணிக் கவலைப்படுகிறார்கள்.
கிழக்கு மாகாணத்தில் முன்னாள் குழந்தைப் போராளியும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினருமான பிள்ளையான் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாண அரசின் முதலமைச்சராக இருக்கிறார்.  ஆயினும் கிழக்குமாகாணத்தின் அரசினால் நியமியக்கப்பட்ட ஆளுனர் சகல அதிகாரங்களையும் கொண்டவராக இருக்கிறார்.  இவரும் முன்னாள் இராணுவ அதிகாரியாவார்.  மாகாண சபை  எடுக்கின்ற எந்தச் சட்டரீதியான நடவடிக்கையையும் தடுத்து நிறுத்தும் அதிகாரம் இவரிடம் உள்ளது.
2008 ம் ஆண்டு கிழக்கு மாகாண சபை கொண்டுவந்த ஒரு சட்டமூலத்தை ஆளுனர் தனது அதிகாரத்தின் மூலம் தடுத்து விட்டிருந்தார்.
அந்தச் சட்டமூலமானது கிழக்கு மாகாண சபைக்கு மோட்டர் வாகன அனுமதிப் பத்திரங்களை வழங்கும் அதிகாரத்தை ஏற்படுத்தித்தருவதாகும்.  இதன் மூலம் கிழக்கு மாகாணம் ஒருவருடத்திற்கு ஒரு பில்லியன் ரூபாக்களை பெற்றுக்  கொள்ளக்கூடியதாகவிருந்திருக்கும்  என முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினரும் இன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஆலோசகருமான திரு விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அண்மையில் புலம் பெயர்ந்தவர்களிடம் இருந்து நேரடியாக நிதி திரட்டும் திட்டத்தை அங்கீகரிக்கும் கிழக்கு மாகாண சபையின் சட்டமூலத்தையும் ஆளுனர் தடுத்து விட்டார் என அவர் மேலும் கூறினார்.

அரசாங்கம் வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்கள் பொருளாதார ரீதியாக உயர்வதை விரும்பவிலை எனவும் அவர் சொன்னார்

திருகோணமலையிலும் வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை அமைத்து வருவது பற்றியும் மக்கள் கவனம் கொள்கிறாரகள்.
குறைந்த விலையில் நிலங்களையும் நல்ல தொழில் வாய்ப்புக்களையும் தென்பகுதிச் சிங்களவர்களுக்கு வழங்குவதன் மூலம் அரசாங்கம் அவர்களை வடக்கில் குடியேறுமாறு தூண்டிவருகிறது.
அண்மையில் மத்திய அரசாங்கம் திருகோணமலையில் 50 நிலத்துண்டுகளை கிட்டத்தட்ட இலவசமாகவே வழங்கவிருந்ததாக திரு விக்னேஸ்வரன் கூறுகிறார்.  இவை உல்லாசப் பயணிகளுக்கான விடுதிகளை கட்டுவதற்கான இடங்களாகும்.  ஆயினும் ஒரு தமிழரும் அந்நிலத்தை  வாங்கிப்  புதிய விடுதிகளை அமைக்கும் முதலீட்டைச் செய்யத் தயாராக இல்லை.  கடந்த டிசம்பரில் வியன்னாவில் நடந்த தமிழ் முதலீட்டாளர்களுக்கான ஒன்று கூடலில்  திருகோணமலையில் முதலிடும் படி தாம் கெஞ்சியதாகவும் ஆனால் எவரும் அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் கூறினார்.
அரசு தங்களது முதலீட்டையும் காசையும் எடுக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் தரமுடியும் என தமிழ் முதலீட்டாளர்கள் கேட்டதாகவும் தான் அதற்கு “விடுதலைப்புலிகள் என்ன வாக்குறுதிகளைத்  தந்ததினால் நீங்கள் அவர்களுக்கு காசு கொடுத்தீர்கள்” எனவும் கேட்டதாகவும் விக்னேஸ்வரன் கூறினார்.  தான் கேட்ட கேள்விக்கு தமிழ் முதலீட்டாளர்கள் எந்தப்பதிலையும் தரவில்லை எனவும் கூறினார்.
இறுதியாக எவரும் திருகோணமலையில் முதலீடுகளைச் செய்யவிலை என்றார்  விக்னேஸ்வரன்.
இரவு கவியும் போது இளைஞர்கள் குழு ஒன்று சிறு வர்ண மற்றும் பொன் மீன்களைக் கடலில் மூழ்கிப் பிடிப்பதற்காக படகில் ஏறிக் கொண்டிருந்தார்கள்.
கருமையான சுருண்ட முடியும் அகன்ற புன்னகையும் கொண்ட பொன்னம்பலம் கடற்கரையோரச்சாலையில் வந்து கொண்டிருந்த மந்தைக் கூட்டத்தை விலக்கி தனது விடுதியில் தங்கியிருந்த ரஸ்சிய விமானப் படையின் விமானிக்கு கையசைத்தபடி வீதியில் சென்று கொண்டிருக்கிறார்.
எங்களது நாடு சண்டையில் பட்டது போதும் என நான் நினைக்கிறேன்.  “எனக்கு தெரியும் அரசாங்கம் எங்களை நம்பப் போவதில்லை என்று இன்னும் துயரமானது என்னவென்றால் எமது மக்கள் தங்களை இன்னும் நம்பத் தொடங்கவில்லை என்பதாகும்.  ஆனால் போர் இல்லாத வாழ்வில் எதுவும் சாத்தியம் நாங்கள் இதை மட்டுமே இறுக்கப்பட்டுக் கொள்ளவேண்டும்.  போர் இல்லாத வாழ்வை என்கிறார் பொன்னம்பலம்.

அபிப்பிராயங்கள்
RSS comment feed
(5) அபிப்பிராயங்கள்
06-11-2010, 08:10
 - Posted by pranavan,
சுவாமி விவேகானந்தர் பாரீஸ் நகரிலே இருந்தபொழுது ஓய்வு எடுப்பதற்காக குதிரை வண்டியிலே தனது சிஷ்யை ஐரோப்பிய பெண்மணியுடன் பாரீஸ் நகரை வலம் வந்தார். ஒரு தெரு வழியாக ஒரு வீட்டுக்குள்ளே இருந்து இரண்டு சிறிய பையன்கள் வெளியே வந்தார்கள். அவர்களின் தோற்றம் பணக்கார வீட்டுக் குழந்தைகள் போன்று தோன்றியது. அவர்களது அம்மா அந்தக் குழந்தைகளை அழைத்து வந்தார்கள். குதிரை வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அந்தக் குழந்தைகளை கட்டிப்பிடித்து முத்தமிட்டு, தட்டிக்கொடுத்துவிட்டு மீண்டும் குதிரை வண்டியில் ஏறி ஓட்டிக்கொண்டு போனார்.“யார் அந்த சிறுவர்கள்?” என்று விவேகானந்தரின் சிஷ்யை கேட்டாள். “என்னுடய பிள்ளைகள்தான்” என்று கூறினார் குதிரை வண்டியை ஓட்டியவர். அவர்களுக்கு ரொம்ப ஆச்சரியம். “குழந்தைகளைப் பார்த்தால் ரொம்ப பணக்கார வீட்டுக் குழந்தைகள் போலத் தோன்றுகிறது. இவர் குதிரை வண்டி ஓட்டுகிறாரே என்று”. குதிரைவண்டு ஓட்டுகிறவர் திரும்பிப் பார்த்தார். பாரீஸ்லே ஒரு வங்கி பேரைச் சொல்லி ‘அந்த வங்கியை உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டடார். “ஓ கேள்விபட்டிருக்கிரோமே! ரொம்ப பெரிய வங்கி ஆச்சே அது! எங்களுக்கு கூட அந்த வங்கியிலே கணக்கு இருந்தது. ஆனா இப்பொழுது அந்த வங்கி திவாலாகி விட்டதாக தெரிகிறதே” அப்படின்னாங்க சுவாமியோட சிஷ்யை.இதைக் கேட்டுவிட்டு… அதற்கு பிறகு அந்த குதிரை வண்டியைய் ஓட்டியவர் விளக்கினார். “நான் தான் அந்த வங்கிக்குச் சொந்தக்காரன்! அந்த வங்கி இப்ப கொஞ்சம் கஷ்ட நிலைமையில்தான் இருக்கிறது. பாக்கிகள் எல்லாம் வசூல் பண்ணி கடன்களை எல்லாம் அடைக்க சிறிது நாள் ஆகும் போல தெரிகிறது. இந்த நிலைமையில் நான் மற்றவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை. சொந்த ஊரிலே ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்தேன். என் கிட்டே இருந்தது… என் மனைவி கிட்டே இருந்தது எல்லாவற்றையும் விற்று இந்த குதிரை வண்டி வாங்கி வாடகை வண்டியாக ஓட்டிக் கொண்டு இருக்கிறேன். என் மனைவியும் கொஞ்சம் சம்பாதிக்கிறாள். எங்களுடைய இரண்டு பேர் வருமானத்தில் குழந்தைகளுக்கு ஆகிற செலவுகளை சரிசெய்து கொண்டு இருக்கிறோம். பாக்கிகளை வசுல் செய்து கடன்களை அடைத்ததும் மறுபடியும் வங்கியை திறந்துவிடுவேன்!” என்றார்.சுவாமி விவேகானந்தர் இதை கேட்டுக் கொண்டு இருந்தார். மனதிற்கு மகிழ்சியாக இருந்தது. சுவாமி விவேகானந்தர் சொன்னார், “இதோ இந்த மனிதரைப் பார்? இவர்தான் சரியான வேதாந்தி. அப்படியே நடைமுறைப்டுத்தியிருக்கிறார்! பெரிய ஒரு அந்தஸ்திலே இருந்து விழுந்துவிட்டால் கூட சூழ்நிலைக்கு இரையாகிவிடவில்லை! அப்படின்னு சொல்லி ஆச்சரியப்பட்டார்!”.“எவ்வளவுதான் கஷ்டம் வந்தாலும் தன்னம்பிக்கையை தளரவிடக்கூடாது
06-11-2010, 08:10
 - Posted by Nages
சுவாமி விவேகானந்தரைப்பற்றி நிறைய கதகளை அவுட்டுவிடுவதின் மூலமாக வன்னிமக்களின் அவலவாழ்வு முடிவுக்கு வரப்போவதில்லை. 75 ஐந்துகளில் ஆரம்பிக்கப்பட்ட புலி அமைப்பால் சீரளிக்கப்பட்ட எமது சமூகம் எதிர்காலத்தைப்பயத்துடன் நோக்குகிறது "அடுத்து இனி எங்களுக்கு என்ன நடக்கும் " இங்கே தன்னம்பிக்கை சராசரி வாழ்வுரிமையை நோக்கியதாக இருக்கிறதே தவிரவும் பயங்கரவாதத்தை சீர் செய்யும் நோக்கிலானதல்ல என்பதை விளக்கவேண்டிய கடப்பாடு உள்ளது. தமிழனின் உழவியல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, மேலை நாடுகளில் வாழும் மக்களின் உழத்திறனை மிகவும் பாரிசில் பிச்சை எடுக்கும் தமிழனால் புரிந்துகொள்ளமுடிவதில்லை.
06-11-2010, 08:10
 - Posted by aron
நாகேஷ் உமக்கும் பிச்சைக்காரர்கலுக்கும் உல்ல தொடர்பு என்ன ? தெலிவாகக்க கூரவும்.
06-11-2010, 08:10
 - Posted by இளங்கோ
என்ன அண்ணை நாகேஸ் சிங்கள குடியேற்றம் பற்றி வாய் திறக்கிறார் இல்லை.
06-11-2010, 08:10
 - Posted by Rason.s
உங்கலுக்கு என்ன பிரச்சினை என்ரு தெலிவாகக் கூரவும்!பிச்சைக்காரர்கல் என்ரால் உங்கலுக்குப் பிடிக்காதா???


 

துப்பாக்கி யாரைக்காப்பாற்றும்?

 
தமீழீழ விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலத்திலும் இப்போதுள்ளதைப்போலவே ஒற்றுமையின்மையும் சுயநலன்களும் இருந்தன.
துப்பாக்கி யாரைக்காப்பாற்றும்?
 
 
 

இந்தக்கிழமை ஊடகங்களில் வந்த  கட்டுரைகளில் எனக்கு முக்கியமாகப்பட்ட இரண்டு கட்டுரைகள் பற்றியும் அவற்றில் மேலெழுந்து வந்த முக்கியமான விடையங்கள் பற்றியும் எனது எண்ணங்களைப்  பகிர விரும்புகிறேன்.
முதலாவது கட்டுரை  மொழிபெயர்பாக வந்த
வளரும் இலங்கையுள் தமிழர்களின் வாழ்க்கை நம்பிக்கையிழந்து தனித்திருக்கிறது” ‐  என்னும் கட்டுரையாகும்.
இரண்டாவது கட்டுரை
தலைவர் பிரபாகரனின் துப்பாக்கி முனையிலிருந்து பி(ப)றந்த அதிகாரங்கள்
என்னும் கட்டுரையாகும்.
முதலாவது ஒரு கனேடியப்பத்திரிக்கையாளளின் இலங்கை பற்றிய அறிக்கையிடலாகும். அதனைத் தெளிவுக்காக ஆங்கிலத்திலும் தேடி வாசித்தேன்.
இக்கட்டுரையில் அரச ஒடுக்குமுறை தெளிவாக வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கிறது.
அதிகாரப்பகிர்வின்மை, இனச்சார்பான ஆட்சிமுறைமை, தமிழர்கள் இரண்டாம் பட்ச நிலையில் வைக்கப்பட்டுள்ளமை, சிங்களக்குடியேற்றம், பத்திரிகை சுதந்திரமின்மை எனப் பலவற்றை அவர் கூறிச் செல்கிறார். அதே நேரத்தில் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் ஏற்றுக்கொள்கிறார்.
 
இனி அதே கட்டுரையில் வந்த கீழ்கண்ட பகுதியை நீங்களும் வாசித்துப்பாருங்கள்
 
(“Recently, the federal government offered 50 prime beachfront plots in Trincomalee to be developed into new hotels. The plots were virtually free, Vigneswaran said, yet no Tamils bid for them, even after he attended a December meeting in Vienna with a group of Tamil expats and pleaded with them to invest.
“They asked what promises we could offer that the government wouldn’t take their money,” Vigneswaran said. “I said, ‘well what promises did the L.T.T.E. give you when you were giving them money?’ They didn’t answer. And they didn’t invest.”)

“அண்மையில் மத்திய அரசாங்கம் திருகோணமலையில் 50 நிலத்துண்டுகளை கிட்டத்தட்ட இலவசமாகவே வழங்கவிருந்ததாக திரு விக்னேஸ்வரன் கூறுகிறார்.  இவை உல்லாசப் பயணிகளுக்கான விடுதிகளை கட்டுவதற்கான இடங்களாகும்.  ஆயினும் ஒரு தமிழரும் அந்நிலத்தை  வாங்கிப்  புதிய விடுதிகளை அமைக்கும் முதலீட்டைச் செய்யத் தயாராக இல்லை.  கடந்த டிசம்பரில் வியன்னாவில் நடந்த தமிழ் முதலீட்டாளர்களுக்கான ஒன்று கூடலில்  திருகோணமலையில் முதலிடும் படி தாம் கெஞ்சியதாகவும் ஆனால் எவரும் அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் கூறினார்.

அரசு தங்களது முதலீட்டையும் காசையும் எடுக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் தரமுடியும் என தமிழ் முதலீட்டாளர்கள் கேட்டதாகவும் தான் அதற்கு “விடுதலைப்புலிகள் என்ன வாக்குறுதிகளைத்  தந்ததினால் நீங்கள் அவர்களுக்கு காசு கொடுத்தீர்கள்” எனவும் கேட்டதாகவும் விக்னேஸ்வரன் கூறினார்.  தான் கேட்ட கேள்விக்கு தமிழ் முதலீட்டாளர்கள் எந்தப்பதிலையும் தரவில்லை எனவும் கூறினார்.”
 
சனநாயகப் பாதைக்கு திரும்பிய பழைய போராளியின் செயலாளர் கேட்கிறார்
“விடுதலைப்புலிகள் என்ன வாக்குறுதிகள் தந்ததனால் அவர்களுக்கு காசு கொடுத்தீர்கள் “ என்று.

புலிகள் மக்களிடம் அவர்களின் சுய விருப்புடனும் சுய விருப்பமில்லாமலும் உதவிகளைப்பெற்றுக்கொண்டார்கள்.( இது தொடர்பாகவும் கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.)
 
விக்னேஸ்வரன்  விடுதலைப்புலிகள் மாதிரித் தாங்களும் காசு வேண்ட விரும்புகின்றாரா? எந்த வாக்குறுதிகளும் தரமாட்டோம் ஆனால் “விடுதலைப்புலிகளுக்கு காசு கொடுத்தமாதிரி” எங்களுக்கும் தாருங்கள்; வந்து முதலிடுங்கள்  என்கிறாரா?

புலிகள் தமீழீழம் பெற்றுத்தருவோம் என்று வாக்கு கொடுத்தார்கள். அந்த வாக்கை திரு விக்கினேஸ்வரன் கொடுத்திருந்தால் சிலவேளை புலம் பெயர்ந்த தமிழர்கள் முதலிட்டிருப்பார்கள்.

முதலாளித்துவ சனநாயக அரசொன்று முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பை  தமிழ் முதலீட்டாளர்கள் கேட்கும் போது புலிகளை ஏன் அதற்குள் இழுக்க வேண்டும்?

யுனி லீவருக்கும்  எயர்ரெல்லுக்கும் அமேரிக்க லெவிக்கும் கொடுக்கும் முதலீட்டுப் பாதுகாப்பு உத்தரவாதத்தை தமிழர்களுக்கு தர முடியாதவர்களுக்கு புலிகளைக்குறை சொல்ல என்ன அருகதை இருக்கிறது.

அரசினதும்  அரசாங்கத்தினதும்  பாத்திரமும்  பணியும் அறியாதவர்கள் ஆளும் நாடே இலங்கை.

இதே கட்டுரையில் கட்டுரையாளர் விடுதலைப்புலிகளை .இந்த நாட்டின் வளர்ச்சியை பல வருடங்களா தடுத்து நின்ற ஈவிரக்க மற்ற பிரிவினை வாதிகள் என்கிறார் ( the cold‐blooded separatist group that paralyzed the country’s progress for so many years...,)  இப்படியொரு பெயரை விடுதலைப்புலிகள் பெற்றுக் கொண்டது தற்செயலான சம்பவம் அல்ல. எல்லா வகையான முரண்பாடுகளையும் ஆயுத முனையில் தீர்த்துக் கொள்ள முனைந்ததன் பலனே அவர்கள் இந்தப்பேரை பெற்றுக் கொண்டமைக்கு காரணமாகும்.

அந்த அடிப்படையைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத தொனியை இரண்டாவது கட்டுரை புலப்படுத்துகிறது.

கடந்த  முப்பது வருடங்களாக கற்றுக்கொண்ட பாடத்தை ஒரு நொடியில் மறந்து போய் இன்றைக்கு மீளவும்  தோன்றிஇருக்கிற சுயநலன்கள் , துரோகங்கள் முரண்பாடுகளுக்கெல்லாம் பிரபாகரனின் ஆயுதம் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே அதன் மூலம் இவற்றையெல்லாம் அடக்கி விட்டிருக்கலாமே என்னும் ஆதங்கதினை இரண்டாவது கட்டுரை வெளிப்படுதுகிறது.
கீழே உள்ள மேற்கோளைக்கவனியுங்கள்:
 
“ஆனால் தற்போது தலைவர் பிரபாகரன் அவர்களின் துப்பாக்கிகளில் இருந்த அதிகாரங்கள் இல்லாமல் போய்விட்டனவோ என்ற எண்ணத்தில் பல விரும்பத்தகாத விடயங்கள் இடம்பெறுகின்றன என்பதை நாம் கூறித்தான் நமது வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் அணுவளவும் இல்லை....1

இவற்றையெல்லாம் பார்க்கையில் நமது விடுதலை நமது தேசியம் என்ற கொள்கைகளுக்கு முன்னர் முன்னுரிமை கொடுக்கப்பட்டனவா அல்லது தலைவர் பிரபாகரனின் துப்பாக்கிகளில் இருந்த பிறந்த அதிகாரங்கள் தற்போது பறந்து போய்விட்டன என்ற எண்ணம் இவர்களுக்கு வந்து விட்டனவா என்று உதயன் கேட்கும் வாரமாக இந்த வாரம் உள்ளது....2””
 
நாடு கடந்த அரசு  விடுதலைப்புலிகளின் தொடர்சியே ஆயினும்  தனக்குள் ஒரு சனநாயகப் பொறிமுறையைக் கடைப்பிடிக்க முனைவதாகத் தோன்றுகிறது. இது ஆரோக்கியமானது. நாடு கடந்த அரசுக்கு எதிராக எடுக்கப்படுகிற எந்த நடவடிக்கையையும் அது சனநாயக வழியிலேயே எதிர் கொள்ள வேண்டும்.

துப்பாக்கி முனையில் கட்டப்பட்ட தேசியம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை அதற்கு விலை கொடுத்த மக்கள் அறிவர்.

இக் கட்டுரையில் துப்பாக்கி முனையில் இருந்து தான் அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்ற மாவோவின் கூற்று  மிகவும் எளிமைப்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
 
மேலும்  தற்போது  மாவோவின் துப்பாக்கி சீனாவில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதையும் யாவரும் அறிவர்.
 
தமீழீழ விடுதலைப் போராட்டம்  தொடங்கிய  காலத்திலும் இப்போதுள்ளதைப்போலவே ஒற்றுமையின்மையும்  சுயநலன்களும்  இருந்தன. எப்பொழுதும் எல்லோருடைய கருத்துக்களும் ஒன்றாக இருப்பதில்லை. முரண்பாடுகளூடும் பொது நோக்கத்தை நோக்கி சேர்ந்து வேலை செய்யும் சனநாயகப்பொறிமுறையை ‐அதற்கு ஆயிரம் வருடங்கள் ஆனாலும்  உருவாக்க வேண்டும். அது மட்டுமே தமிழ்த்தேசியம் என்னும் கருவையும் அதன் இயக்கத்தையும் இருப்பையும் காப்பாற்றும்.
 
விடுதலைப்புலிகளையே காப்பாற்றாத துப்பாக்கி யாரைக்காப்பாற்றும்?

தேவன்:‐
அபிப்பிராயங்கள்
RSS comment feed
(2) அபிப்பிராயங்கள்
06-11-2010, 08:10
 - Posted by tamiliam
Thevan,"Piramaatham" If we travel in the democratic path, all other selfish-money hunger-powerhunger groups will eventually disapper.There are lot of tamils think that if there is a wedding he must be the bride and if there is a funeral he must be the dead body-all they need is popularity-for that they are prepared to do any thing. God bless us we tamils.
06-11-2010, 08:10
 - Posted by YOGA.S
ஏறத்தாள இருபத்தைந்து ஆண்டுகளாகவேனும் பிரபாகரனின் துப்பாக்கி தமிழ் மக்களை மட்டுமல்ல,நிலத்தையும் காத்தது வரலாறு!மறைக்கவோ,மறுக்கவோ முடியாதது!காற்றடிக்கும் பக்கம் சாய்வோருக்கு பிரபாகரனின் துப்பாக்கி இப்போது ஓய்ந்திருப்பதால் வாய்ச் சவடால் விட வசதியாயிருக்கிறது போலும்!நடைபெறும் சம்பவங்கள் மீண்டும் அந்தத் துப்பாக்கியின் தேவையை உண்ர்த்தியே நிற்கின்றன!காலம் பதில் சொல்லும்!வெறும் வார்த்தை அலங்காரமல்ல!மாறி வரும் உலகில் எதுவுமே மாறலாம்!பறித்தெடுக்க உதவியவர்களே வாங்கிக் கொடுக்கவும் கூடும்!இன்ஷா அல்லா!!!!!!!!எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நீளும் சீனக்கரங்கள்...


 
விடுதலைப்புலிகளின் மீதான போரின் போதும் தோல்வியின் பின்னரும் சீனாவின் இலங்கையின் மீதான ஈடுபாடும் இலங்கையின் சீனச் சாய்வும் மிக வெளிப்படையாகி விட்டது .
நீளும் சீனக்கரங்கள்...GTN ற்காக தேவன்
 
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் தோல்வியின் பின் நாங்கள் முக்கியமானதொரு இடத்தில் நிற்கிறோம்.  எங்களையும் எங்களைச் சுற்றி நடப்பவைகளைப் பற்றியும் அறியவேண்டிய  தேவை முன் எப்பொழுதும் இல்லாதளவிற்கு அதிகரித்துள்ளது.

உலகம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறியாது  போனமையும் தமிழர்களின் இன்றைய அவல வாழ்வுக்கு ஒரு காரணமாகும் .  இன்றுவரையும் உலகம் இயங்கிக் கொண்டிருக்கும் முறைமையைப் பார்க்கும் போது தமிழர்கள் ஒரு தனி இனமாக விடுதலை அடைவது சாத்தியமா என்ற கேள்வியும் எழுகிறது.

இது கேள்வி மட்டுமே.  கோபம் கொண்டு துப்பாக்கியை தூக்கிக் கொண்டு வரவேண்டாம்.....�
 
விடுதலைப்புலிகளின் மீதான போரின் போதும் தோல்வியின் பின்னரும் சீனாவின் இலங்கையின் மீதான ஈடுபாடும் இலங்கையின் சீனச் சாய்வும் மிக வெளிப்படையாகி விட்டது .

சீனா தனது கரங்களை உலகம் முழவதும் வியாபித்து வருகிறது.  இந்த வியாபகம் எவ்வாறு நிகழ்ந்து வருகிறது என்பதை அவதானிப்பது முக்கியமான  படிப்ப்பினைகளைத்தரலாம்.

ஆசிய ஆபிரிக்க அய்ரோப்பியக்கண்டங்களில் சீனாவின் கால் தடங்கள் பதிந்து வருகின்றன.

சீனாவிடம் இருக்கும் அபரிமிதமான அன்னியச் செலாவாணி சீனாவின் நீளும் கரங்களின் இதய நாடியாக இருக்கிறது.

இப்பத்தியில் சீனா எப்படி ஆபிரிக்காவில் தனது கால்களைப் பதித்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

வளர்ந்து வரும் சீனா பலவேறுபட்ட மூலப் பொருட்களுக்கான அபரிமிதமான தேவையைக் கொண்டுள்ளது.  ஆபிரிக்கா சீனாவிற்கு தேவைப்படுகிற பல்வேறு மூலப் பொருட்களைத் தாராளமாக கொண்டிருக்கிறது.

சீனாவின் வியாபகம் இரண்டு வகைகளில் நிகழ்கிறது.

தனிப்பட்ட சீனப் பிரசைகள் வெளிநாடுகளில் வியாபாரங்களிலும் முதலீடுகளிலும் ஈடுபடுகின்றனர்சீன அரசின் முதலீடுகள்.
 
சீனப்பிரசைகளின்  எண்ணிக்கைகளும்  முதலீடுகளும் மிகக் குறிப்பிடத் தக்களவில் ஆபிரிக்க நாடுகளில் அதிகரித்துள்ளன.
 


சீனர்கள் நேரடியாகவே ஆபிரிக்காவிற்கு புலம் பெயர்ந்து சென்று வியாபாரங்களை ஆரம்பிக்கிறார்கள்.  அவர்களின் மிக மலிந்த விலையிலான பொருட்கள் வறிய நாடான ஆபிரிக்காவிற்கு கவர்ச்சிகரமான சந்தையாகும்.

உள்ளாடைகள், மணிக்கூடுகள், ரீ‐சேட்கள், பொம்மைகள், பூட்டுக்கள், குழந்தை உடுப்புகள்இ துவிச்சக்கர வண்டிகள்  என எல்லா வகையான பொருட்களும் மலிவு விலையில் கிடைக்கின்றன.  பொருட்களின் தரம் குறைந்தவையாகவே இருக்கின்றன.
 
மற்றயது சீன அரசின் முதலீடுகள்

நான்கு வருடங்களின் முன்பு சீனாவில் நடந்த சீன ‐ஆபிரிக்க கூட்டுழைப்புக்கான அரங்கத்தின் கூட்டத்தில் 54 ஆபிரிக்க நாடுகளில் 48 நாடுகள் தவறாது கலந்து கொண்டிருந்தன.  அதேவேளை இதையொத்த இந்தோ‐ ஆபிரிக்க கூட்டுழைப்புக்கான அரங்கத்தின் கூட்டம் 2 வருடங்களுக்கு முன்பு  இந்தியாவில் நடந்த போது 18 ஆபிரிக்க நாடுகளே அதில் கலந்து கொண்டிருந்தன.

இந்தியாவில் ஆட்சி மாற்றங்களின் போது அதன் வெளிநாட்டுக்கொள்கைகளும் மாற்றமடைகின்றன. மேலும் இந்தியாவின் தனியார் துறையே வெளிநாடுகளில் அதிகம் முதலீகளைச் செய்கிறது இந்திய அரசின் முதலீடுகள் மிகக் குறைவு.

சீனாவின் பொருளாதாரக்கொள்கை அடிக்கடி மாற்றமடைவதில்லை அதிகாரமும் மாற்றமடைவதிலை. இதுவும் சீனாவின் வளர்ச்சிக்கு அடிப்டையாகும்.

சீனாவின் முதலீட்டின்‐பேரத்தின் சாரம் இதுதான்:  உங்கள் நாட்டின் கனியவளங்களை எங்களுக்குத் திறந்து விடுங்கள் நாங்கள் உங்களுக்கு வீதிகளையும் துறைமுகங்களையும் வைத்தியசாலைகளையும் அமைத்துத் தருகிறோம் என்பதாகும்.
 
சீனா இந்த உள்நாட்டுக்கட்டமைப்புப் பணிகளை தனது தொழிலாளர்களையும் தனது தொழில்நுட்பத்தையும் கொண்டே செய்கிறது.   ஆபிரிக்காவின் தொழில்நுட்பமோ உதவிகளோ இங்கு பயன் படுத்தப்படுவதில்லை. ஆபிரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதாரத்தையோ தொழில் நுட்ப அறிவையோ வளர்ச்சி அடையச் செய்யக் கூடிய கூட்டு ஒப்பந்தங்களாக இந்த உள்நாட்டுக் கட்டுமானப்பணிகள் வடிவமைக்கப்பட வில்லை. மேலும் அமைக்கப்படும் சாலைகளும் துறைமுகங்களும் சீனாவினால் அகழ்ப்படும் மூலப்பொருட்களை சீனாவை நோக்கி கொண்டு செல்வதை இலகுபடுத்தும் நோக்கத்திற்காகவே அமைக்கப்படுகின்றன.  எனவே சீனா அமைத்து தரும் உட்கட்டுமானம் உண்மையான ஆபிரிக்க நலன்களின் அடிப்படையிலானதுமல்ல.

மற்றைய முக்கியமான விடையம் ஆபிரிக்காவில் இருக்கின்ற அரசுகளின் ஊழல் பற்றியோ மனித உரிமை மீறல்கள் பற்றியோ அடக்கு முறைகள் பற்றியோ சீனா எந்தக் கேள்வியையும் கேட்பதில்லை.

ஆபிரிக்காவில் இருக்கின்ற அனேகமான ஊழல் நிறைந்த அரசுகள் சீனாவின் இந்தக் கொள்கையால் கவரப்படுகின்றன. அனேகமாகச் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பின்னணியில் அரச தலைவர் தொடங்கி அடிமட்டம் வரை பெருமளவு கையூட்டுக்கள் பரிமாறப்பட்டுள்ளதாக பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.
 
 
 
கோபால்ற், செம்பு, வெள்ளி, நாகம் போன்ற அத்தியாவசியமான மூலப்பொருட்கள் ஆபிரிக்கா முழுவதும் பரவிக் கிடக்கின்றன.

மிக ஊழல் நிறைந்த கொங்கோ தனது கனியக் கிடங்குகளை சீனாவுக்கு எதிர்வரும் 20 வருடங்களுக்கு திறந்து விட்டுள்ளது.  4 தொன்கள் கோபால்ற் பத்து மில்லியன் தொன் செம்பு ஆகியவை இக்காலப் பகுதியில் அகழப்படும்.

இவற்றின் பெறுமதி கிட்டத்தட்ட 9 மில்லியாட் டொலர்கள்ஆகும். அண்மையில் தென்ஆபிரிக்காவும் ரிற்றானியம் என்னும் கனிமத்தை அகழ்வதற்கான அனுமதியை சீனாவுக்கு அழித்துள்ளது.  இங்கேயும் அதற்குப் பதிலாகச் சீனா தென்னாபிரிக்காவின் உள்நாட்டுக் கட்டமைப்புக்களை மேம்படுத்தச் சம்மதித்துள்ளது.

தென் சூடானில் பெறப்படும் மசகு எண்ணையைச் சீனாவை நோக்கி கொண்டு செல்வதற்காக கென்னியா  தனது இரண்டாவது துறைமுகத்தை கட்டுவதற்கு சீனா முழுமையாக உதவுகிறது.

டாவூர் மாகாணத்தில் மிகக் கொடுமையான இனப் படுகொலையை நடாத்திவரும் சூடான் அரசாங்கத்தை எந்த நிபந்தனையும் இன்றி சீனா, சூடானின் மசகு எண்ணைக்காக ஆதரித்து வருகிறது.

மேலும் சூடானில் மசகு எண்ணை பதனிடும் நிலையங்களை அமைத்தல் விவசாயத்தை அபிவிருத்தி செய்தல் ஆகிய துறைகளில் சீனா அதிகளவு முதலீடுகளைச் செய்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு  சபையில்  சூடான் மீது கொண்டுவரப்படும் தடைகளுக்கு எதிராகச் சீனா செயற்பட்டு வருகிறது.  மேலும் சூடானிற்கு ஆயுத விற்பனைத் தடை இருப்பதனால் சூடான் தானாகவே ஆயத தயாரிப்புச் சாலைகளை நிறுவியுள்ளது.இதன் பின்னணியில் சீனா இருப்பதாகக் கூறப்படுகிறது.

கானாவில் இருந்து சீனா கழிவுச் செம்புப் பொருட்கள், பழைய இரும்பு, மரப்பலகை, றபர்இ கொக்கோ ஆகியவற்றை வாங்கிக் கொள்ளும் இலாபகரமான ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.

எகிப்தில் கார்கள் அவற்றுக்கான உதிரிப்பாகங்கள் என்பவற்றை உற்பத்தி செய்யவும் ஏற்றுமதி செய்யவும் கூடிய வசதிகளைக் கொண்ட உற்பத்திச் சாலைகளை அமைக்கிறது.

அல்ஜீரியாவில் எண்ணை வளங்களை எதிர்காலத்தில் அகழும் நோக்குடன் அல்ஜீரியாவிற்கு புதிய விமான நிலையத்தையும் 60,000 புதிய வீடுகளையும் ஆபிரிக்காவில் மிக நீண்ட வீதியையும் அமைத்துக் கொடுக்கிறது.

கமரூனில் கனிப்பொருட்களையும் மரத்தையும் பெறுகிறது.

மேலோட்டமாக பார்க்கும் போது இவை யாவும் வியாபார நலன்களாகத் தோன்றுகின்ற போதும் அடிப்படையில் தனது சந்தைகளைக் காப்பாற்றும் நோக்குடன் தனது ராணுவத்தையும் பலப்படுத்தியே வருகிறது.

சந்தைகளைக் காப்பாற்ற இராணுவ பலத்தை அதிகரித்தல்  இராணுவ பலத்தை அதிகரிக்க சந்தைகளை  விரிவு படுத்தல் என சீனா அடைந்து வரும் வளர்ச்சி யாவரையும் அச்சம் கொள்ள வைக்கிறது.

ஒன்றுமட்டும் தெளிவாக தெரிகிறது தனது நலன்களை பேணும் அரசுகளை சீனா பாதுகாத்து வருகிறது.  அவை எந்த வகையான அரசுகளாக இருந்த போதும்.  பர்மா, வடகொரியாஇ சூடான்இ கொங்கோ, பாகிஸ்தான், கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில் சீனாவின் கரங்கள் வலிமையானதாக உள்ளன.

இதனால் தான் அந்தந்த நாடுகளின் அரசுகள் தமது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கு  சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளன.

இலங்கையிலும் சீனா துறைமுகங்களையும் வீதிகளையும் அமைத்துவருகிறது.  சீனாவின் அரவணைப்பில்  மகிந்தவும் மகிந்த குடும்பமும் நீண்டகாலத்திற்கு இலங்கையை ஆளப்போகிறார்கள்....
 

GTN ற்காக தேவன்


அபிப்பிராயங்கள்
RSS comment feed
(2) அபிப்பிராயங்கள்
06-12-2010, 17:03
 - Posted by Anonymous
அவசியமான பரந்த ஆய்வு.
06-12-2010, 17:03
 - Posted by Anonymous
சீனா உலக பொருளாதாரத்தில் இந்தியாவை விடவும்...முன்னிற்கின்றது....இலங்கையில் சீனா ஆதிக்கத்தை அதிகப்படுத்தி வருகின்றது...இதில் எவ்வித இரகசியமும் இல்லை..நம்மில் சிலர் இந்தியாவை பூச்சாண்டி காட்டுகின்றோம்.. இலங்கைக்குள் சீனா புகுந்து விட்டது... இது இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தலாயிருக்கும்....என்று இந்தியாவுக்கு புத்தி சொல்வதோடல்லாமல்..இந்தியா தமிழர்பால் அக்கறை கொள்ளாததால் தான் இவை போன்ற விடயங்கள் நிகழ்கின்றன.எனவே இந்தியா தமிழர்களை ஆதரிப்பதனூடாக தன்னையும் காப்பாற்றி தமிழருக்கும் உதவும் வகை செயற்பட வேண்டும்..என தமிழர் தரப்பில் அடிக்கடி அறிக்கைகள் வெளிவருகின்றன...இதனால் தான் இந்தியா நம்மை சந்தேகத்துடன் பார்க்கின்றது... நமக்கே நமது நாட்டின் மீதில்லாத அக்கறை ஈழத்தமிருக்கு எதற்கு.. இதிலேதும் உட்குத்து இருக்குமோ என்ற வகையில் சிந்திப்பது போல் தெரிகின்றது....இந்தியா சீனாவுடன் பகைமை பாராட்ட விரும்பவில்லை.காரணம் இந்தியாவுக்கு நாம் மனதில்கட்டி வைத்திருக்கும் அளவுக்கு பலமில்லை.. வெறும் வாய்சவாடல்கள்தான் அதிகம்...அடிப்படையில் அது ஒரு கோழை...சீனா ஓங்கி அடித்தால்...சிதறி போகும்..எமக்கு சீனாவை பிடிக்காது என்பதற்காக அதன் வலிமையை தவறாக எடை போடக் கூடாது...
அபிப்பிராயத்தை இணைக்க

ஒபாமாவின் இந்தியப்பயணமும் குலைகளை இழந்த தென்னை மரமும்…



 ஆசிய நாடுகளுக்கான தனது ஒன்பது நாட்பயணத்தின் முதற்கட்டமாக ஒபாமா நேற்று இந்தியாவை சென்றடைந்துள்ளார்.


நேற்று அவர்  2 வருடங்களின் முன்பு பாகிஸ்தானிய தீவிரவாதிகளின் தாக்குதலில் 166 மக்கள் பலியடைந்த தாஜ்மகால் விடுதியை பார்வையிட்டதுடன் மஹாத்மா மகாத்மா காந்தி  நினைவுப்பொருட்கள் காட்சிச்சாலையையும் பார்வையிட்டார்.

ஓபாமாவின் ஆசிய பயணத்தின் பின்ணணியில் பல்வேறு நோக்கங்கள்  இருக்கின்றன.
முக்கியமாக  மேலெழுந்து வருகின்ற சில விடையங்களை இங்கே கவனிப்போம்.


பனிப்போர் முடிவின்பின் அமெரிக்காவை மையப்படுத்திய‐ பயங்கர வாதத்திற்கெதிரான போரை மையப்படுத்திய‐ உலக ஒழுங்கு தோன்றியது. ஆனால் அது  வேகமாக மாற்றமடைந்து புதிய உலக ஒழுங்கு ஒன்று தோன்றி வருகிறது.

கடந்த வருடம் ஏற்பட்ட, அமெரிக்காவில் தோன்றி உலகேங்கும் தாக்கத்தை ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடி அமெரிக்க மையவாத உலகை ஆட்டம் காணச்செய்துள்ளது.

சீனா பிரேசில் இந்தியா ரஸ்சியா ஆகிய நாடுகள் உலக அதிகாரத்தில் பங்கு கேட்கிற நிலைக்கு உயர்ந்துள்ளன. குறிப்பாக சீனாவின் கரங்கள் ஆசிய ஆபிரிக்க மற்றும் ஐரோப்பியச் சந்தையை வளைக்கத்தொடங்கியுள்ளன.

அரசியல் அதிகாரப்போட்டியில் எதிரிகளாக இருக்கிற நாடுகள் பொருளாதார ரீதியில் ஒத்துழைக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. உலகளாவிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சந்தைகளை பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவை எல்லா நாடுகளுக்கும் இருக்கின்றன.

2006ம் ஆண்டு ஜோர்ஜ் புஸ் இந்தியாவுக்கு வந்த போது இஸ்லாமியர் தீவிர வாதத்திற்கெதிரான போரும் கருத்துருவாக்கமும் முதன்மைப்பட்டிருந்தன. ஆனால் ஒபாமாவின் இந்தப்பயணம் அமெரிக்காவின் பொருளாதார நலன்களிலேயே முதன்மைக்கவனத்தை செலுத்துகிறது.

அமெரிக்காவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 9.6 சத வீதத்திற்கு உயர்ந்துள்ளது.   அண்மையில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு நடந்த தேர்தலில் ஒபாமாவின் கட்சி கடுமையான தோல்வியை அடைந்தது.  இது எதிர்பார்க்கப்பட்டதாயினும் மக்கள் ஒபாமாவுக்கு எதிராகத்திரும்பியமைக்கான முக்கியமான காராணங்களில் ஒன்று அமெரிக்க உள்நாட்டுப் பொருளாதார நிலமையாகும். அதில் இருந்து மீள்வதற்கு ஒபாமா கடுமையாக ஏதாவது செய்தாக வேண்டிய நிலையில் உள்ளார்.

ஒபாமாவின் இந்தப்பயணம் சரிவடைந்து வரும் அமெரிக்க பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கான ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது;ஆப்கானிஸ்தானில் தொடரும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் சவால்களை எதிர்கொள்வதற்கான ஆசிய நாடுகளின் ஒத்துழைப்பைப் பெறுவது; சீனாவைச் சுற்றி ஒரு பொருளாதார அரசியல் வியூகத்தை அமைப்பது (இந்தியா, இந்தோனேசியா, தென்கொரியா, யப்பான் என அந்த வளையம் அமைந்துள்ளது.)
என்பவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.

மறுபுறத்தில் இந்தியாவும் தனது பின்வரும் நலன்களைக் முதன்மைப்படுத்துகிறது.
மேலதிக அமெரிக்க முதலீடுகளை ஊக்குவித்தல்.  அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களைக் கட்டுப்படுத்தும் ஒபாமாவின் திட்டத்தையிட்டு இந்திய வியாபாரிகள் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

அமெரிக்கா பாகிஸ்தானுடன் கொண்டுள்ள நெருக்கம் இந்தியாவை கவலை அடையச் செய்கிறது. அண்மையில் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு 2 மில்லியன் டொலர்களை இஸ்லாமியத்தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கென  வழங்கி இருந்தது.

பாக்கிஸ்தான் அமெரிக்காவிடம் பெற்றுக் கொள்ளும் நவீன ராணுவத்தொழில் நுட்பங்களும் தளபாடங்களும் எதிர்காலத்தில் தனக்கெதிராகத்திரும்பலாம் என இந்தியா அஞ்சுகிறது.
பெரும்பான்மையான இந்திய உயர்வர்க்கத்தினர் அமெரிக்கா பாகிஸ்தானுடன் நெருங்கி வருவதைவிடவும் இந்தியாவுடன் நெருங்கி வருவதை விரும்புகிறார்கள்.
அமெரிக்காவுக்கு இங்கு தலையிடியாக இருக்கும்  விடையம் என்னவெனில் அமெரிக்காவிடம் இருந்து அளவுக்கு மீறி உதவிகளைப் பெற்றுக்கொண்டு பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது போலக் காட்டிக் கொண்டாலும் பாக்கிஸ்தான் மறுபுறத்தில் காஷ்மீரிலும், இந்தியாவினுள்ளும்  இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு உதவி வருகிறது. மேலும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசுகளின் உளவு நிறுவனங்கள் பாக்கிஸ்தானின் உளவு நிறுவனத்தின் உயர் மட்டத்தில் தலிபான்களுக்கு ஆதரவு இருப்பதாகவும் கருதுகின்றன.
ஆனால் அமெரிக்கா பாகிஸ்தானை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ எதிர்க்க முனையுமாயின் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் வெளிப்படையாகவே உதவிகளைச் செய்யக்கூடும்.
 எனவே என்ன விலை கொடுத்தேனும் அது பாகிஸ்தானைத் தன்னருகே வைத்திருக்கவே விரும்புகிறது. எனவே இந்தப் பயணத்தில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் தங்களுக்கு இடையில் உள்ள கசப்பையும் முரண்பாடுகளையும் தீர்த்துக் கொள்ளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி திரைமறைவில் அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வளர்ச்சி அடைந்து வரும் இந்தியாவையும் தனது பொருளாதார நலன்களுக்காக நண்பனாகவே வைத்திருக்க அமெரிக்கா விரும்புகிறது. சர்வதேச விவகாரங்களில் சீனாவுக்கு அளிக்கப்படும் சம அந்தஸ்து தனக்கு அளிக்கப்படுவதில்லை என்னும்  எரிச்சலும் இந்தியாவுக்கு உண்டு. ஆனால் இந்தியா பிராந்திய வல்லரசு என்ற நிலைக்கு வெளியே இன்னமும் வரவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கத்துவத்தைப் பெறுவதற்கும் இந்தியா தற்போது முயற்சி செய்து வருகிறது.  ஆயினும் அமெரிக்கா இது தொடர்பாக சாதகமான சமிக்கைகள் எதனையும் வெளிக்காட்டவில்லை.
மறு புறத்தில் இந்தியா அமெரிக்காவுடன் கொள்ளும் நெருக்கம் சீனாவையும் திருப்திப்படுத்தப்போவதில்லை.
ஒபாமாவின் வருகை இந்தியாவின் ஏழை மக்களுக்கு கலக்கமூட்டுவதாக உள்ளது.  ஏனெனில் குறிப்பாக அமெரிக்க விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு இந்தியச் சந்தை முழுமையாகக் திறக்கப்படுமென அஞ்சப்படுகிறது.

ஒபாமா வின் வருகையை எதிர்த்து  யத்மல் மாவட்டத்தில் முக்கியமான எதிர்ப்புக் கூட்டமும் ஊர்வலமும் நடத்தப்படுகின்றன. விதர்பா பண்ணை விதவைகளின் சங்கம் இந்த எதிர்ப்பை ஒழுங்கு செய்துள்ளது. 1999 ம் ஆண்டில் இருந்து அமெரிக்க பருத்தி விதைகளின் இறக்குமதிகாரணமாகவும் அமெரிக்கா தனது விவசாயிகளுக்கு வழங்கி வரும் மானியங்கள் காரணமாகவும் இந்திய பருத்தி உற்பத்தியாளர்கள் மிகக்கடுமையான நட்டங்களை  எதிர்கொண்டனர்.இதன் விளைவு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இதுவரை தற்கொலை செய்துள்ளனர். இந்த விவசாயிகளின் விதவைகள் ஒன்று திரண்டு “ஒபாமாவே திரும்பிப்போ” என்கிறார்கள். அவர்களின் ஒபாமாவினை சந்தித்து மனு ஒன்றைக்கையளிக்கும் கோரிக்கையும் இந்திய அதிகாரிகளால் நிராகரிகப்பட்டுள்ளது.

இந்தியாவும் சீனாவும் வளர்ச்சி அடைந்து வரும் பொருளாதார நாடுகளாக இருக்கின்ற போதும் சீனாவின் வளர்ச்சி சீரானதாகவும் இந்தியாவுடன் ஒப்பிடும் போது முழுச் சீனாவையும் சமச்சீராக வளர்ச்சி அடையச் செய்யும் முனைப்புக் கொண்டதாகவும் இருக்கிறது.  சீனாவின் அரச பொருளாதார அதிகாரக் கட்டமைப்புக்கள் இந்தியாவினதை விடச் செயற்திறன் மிக்கதாகவும் இருக்கின்றன.

இந்தியாவின் பொருளாதாரவளர்ச்சி சிலபகுதிகளில்  அபரிமிதமாகவும் பலபகுதிகளில் பின்தங்கியதாகவும் இருக்கிறது. இந்தியாவின் அரச இயந்திரம் ஊழல் நிறைந்ததாகவும் வினைத்திறன் குறைந்ததாகவும் இருக்கிறது.

ஓலிம்பிக் போட்டிகளை சீனா நடாத்திய விதமும் பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை இந்தியா நடாத்திய விதமும் இரண்டு பிராந்திய வல்லரசுகளின் அரச, பொருளாதார நிர்வாகக் கட்டமைப்புக்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதனைக் காட்டின.
நிர்மாண வேலைகளில் ஏற்பட்ட தாமதம், விளையாட்டுவீரர்களுக்கான சுத்தமான தங்குமிடங்களை அமைக்க முடியாது போனமை ,சரியாக இயங்காத உபகரணங்கள் என இந்தியா சர்வதேச அரங்கில் மிகவும் அவமானப்பட்டிருந்தது.
சீனாவுடன் ஒப்பிடும் போது இந்தியா 10 வருடங்கள் பின்தங்கியதாக இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சீனாவின் சீரான பொருளாதார வளர்ச்சியும் அதன் பலம்பெற்று வரும் ஆசியபிராந்திய ராணுவ வலையமைப்பும் அமெரிக்காவை உலக அரசியலில் தனது முதன்மையான பாத்திரம் குறித்து கவலைப்பட வைத்துள்ளது.

2005 ம் ஆண்டில் இருந்து இந்தியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு தொடர்பான விடையங்களில் மேலும் நெருங்கி வந்துள்ளன.
2009 ம் ஆண்டு மலபாரில் நடந்த யப்பானும் பங்கு கொண்ட இராணுவ ஒத்திகையைக் இங்கு உதாரணமாகக் கூறலாம்.
 கடந்த இரண்டு வருடங்களில் இந்தியா இராணுவ போக்குவரத்து விமானங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை அமெரிக்காவிடம் இருந்து பெற வியாபார ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளது. இவற்றின் பெறுமதி 30 பில்லியன் டொலர்கள் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரைகாலமும் தனது இராணுவத்தளபாடங்களுக்கு ரஸ்சியாவை நம்பியிருந்த இந்தியா அமெரிக்கா பக்கம் சாயத் தொடங்கியுள்ளது.

இக்கட்டுரை எழுதப்படும் போது அமெரிக்கா போயிங் விமானங்கள் இலத்திரனியல் இயந்திரங்கள்  போன்றவற்றை இந்தியாவுக்கு விற்பது தொடர்பான இந்திய‐அமெரிக்க 10 பில்லியன் டொலர் வியாபார ஒப்பந்ததைத் செய்துள்ளது. இது அமெரிக்காவில் 50,000 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது. இவற்றால் இந்தியாவின் உழைக்கும் வர்க்கம் என்ன நன்மைகளை அடையுமென எவர்க்கும் தெரியாது.

வளர்ச்சி அடைந்து வரும் ஆசியப்பொருளாதாரங்களைத்  தனக்கு கீழ்நிலையில் வைத்து பார்க்காமல் சமதையாக பார்க்க வேண்டிய நிர்பந்தத்தில் அமெரிக்க ஐரோப்பிய பொருளாதாரங்கள் உள்ளன. இந்த சந்தர்ப்பதைப்பயன்படுத்தி சரியான பொருளாதர ஒப்பந்தங்களை செய்ய முடியும் என ஆசிய பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இந்திய ஆளும் வர்க்கம் தனதும் தான் சார்ந்த முதலாளிகளினதும் நலன்களை மட்டுமே முதன்மைப்படுத்தும் தன்மையே வெளிப்படுத்தி வருகிறது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3 மில்லியன் புதிய மத்திய வர்க்கத்தை உருவாகி உள்ளதாக அறிக்கைகள் தெரிவிகின்றன.

அதே நேரத்தில் பில்லியன் கணக்கானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ்ச்சென்றுள்ளனர்

இவர்களுக்கு அமெரிக்காவின் முதலாவது கறுப்பு சனாதிபதி தான் பார்வையிடச் செல்லுமிடங்களில் தேங்காய்களை பறிக்கவும் குரங்குகளைப் பிடிக்கவுமான தற்காலிக வேலையே வழங்கியுள்ளார்.


GTN ற்காக தேவன்
 
(1) அபிப்பிராயங்கள்
 
06-12-2010, 17:03
 - Posted by Anonymous
உண்மை. சீனா இந்தியாவை பல வழிகளில் முந்தி சென்று கொண்டிருக்கு...""""இந்தியாவும் சீனாவும் வளர்ச்சி அடைந்து வரும் பொருளாதார நாடுகளாக இருக்கின்ற போதும் சீனாவின் வளர்ச்சி சீரானதாகவும் இந்தியாவுடன் ஒப்பிடும் போது முழுச் சீனாவையும் சமச்சீராக வளர்ச்சி அடையச் செய்யும் முனைப்புக் கொண்டதாகவும் இருக்கிறது. சீனாவின் அரச பொருளாதார அதிகாரக் கட்டமைப்புக்கள் இந்தியாவினதை விடச் செயற்திறன் மிக்கதாகவும் இருக்கின்றன."""" .... நல்ல ஆய்வும் - செய்தியும்...

8 ஜனவரி, 2011

நோபல் பரிசும் அதன் அரசியலும் ..




1935 ம் ஆண்டிற்குப் பின்பு முதன்முறையாக நோபல்பரிசுப்பதக்கம் ஒரு வெற்றுக் கதிரைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
சமாதானத்திற்கான நோபல்பரிசு வழங்கப்பட்ட சீன எதிர்புரட்சியாளர் லியூ ஷிஆபோ [Liu Xiaobo] சீனாவில் 2009 இல் இருந்து 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.  அவரது மனைவி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.  அவரது சகோதரர்கள் சீனாவை விட்டுச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.  எனவே பதக்கம் வெற்றுக்கதிரைக்கு.

1935ம் ஆண்டு ஜேர்மனிய அஹிம்சாவாதியான கார்ல் வான் ஒஸ்ஸிற்ஸி[ Karl von Osisietzky] தனது பரிசை பெற்றுக் கொள்ள சமூகமளித்திருக்கவில்லை.
இந்த முறை சமாதானத்திற்கான நோபல் பரிசை லியூ ஷிஆபோ வுக்கு வழங்கியமை சீனாவை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
அதுமட்டுமல்ல நோபல்பரிசளிப்புத் தினத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என தனது ஆதரவு நாடுகளுக்கு சீனா அழுத்தங்களையும் வழங்கியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அழுத்தம் இராசதந்திர மட்டத்திலும் பொருளாதார உறவுகள் மட்டத்திலும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கீழ்வரும் 15 நாடுகள் நோபல்பரிசு வழங்கும் வைபவத்தைத் தவிர்த்திருந்தன.
பர்மா, வடகொரியா, கியூபா, ரஸ்சியா, கசகஸ்தான், துனீசியா, சவுதிஅரேபியா, பாகிஸ்தான், இராக், இரான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், வெனிசுவெலா, எகிப்து, சூடான், மற்றும் மொரொக்கோ.
பரிசளிப்பில் கலந்து கொள்ளாத சில நாடுகள் என்ன காரணத்திற்காக  அவற்றில் கலந்து கொள்ளவிலை என்பதை அறிவது சுவாரசியமானது.
ரஸ்சியா சீனாவின் அழுத்தங்களுக்கு உட்பட்டது எனக் கூற முடியாத போதும்  சீனாவுடனான வளர்ந்து வரும் வியாபார உறவுகளைப் பழுதாக்க  விரும்பியிருக்கவில்லை எனக்கருதலாம்.
சீனாவுக்கு தேவைப்படும் நிலவாயு முழுவதையும் வழங்குவதற்கு ரஸ்சியா ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.  வரும் ஆண்டில் ரஸ்சியா சீனாவின் தியன்வான் மாகாணத்தில் இரண்டு அணுஉலைகளைக் கட்டுவதற்கும் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
இதுமட்டுமல்ல சீனாவும் ரஸ்சியாவும் தமது வியாபார நடவடிக்கைகளைத் தனியே ரூபிளிலும் யென்னிலும் மட்டுமே செய்வதென்ற நிலைப்பாட்டையும் எடுத்துள்ளன. இதன்மூலம் டொலர் மற்றும் யூரோ நாணயங்களில் ஏற்படும் தளம்பல்களில் இருந்து விடுபடவும் முடிவு செய்துள்ளன.
ஜரோப்பிய நாடான செர்பியா முதலில் இந்தப்பரிசளிப்பில் கலந்து கொள்ளப்போவதில்லையெனத் தெரிவித்திருந்தாலும் ஜரோப்பிய ஒன்றியத்தின்   கடுமையான விமர்சனங்களுக்கு பிறகு தனது அரசப்பிரதிநிதியைப் பரிசளிப்பு வைபவத்திற்கு  அனுப்பச் சம்மதித்திருந்தது.
2008 ம் ஆண்டு கொசவோ சேர்பியாவில் இருந்து பிரிந்த போது சீனா அதனை எதிர்த்து சேர்பியாவை ஆதரித்திருந்தது.  கொசவோவின் விடுதலைக்காக பாடுபட்ட  பின்லாந்து பிரதமர் 2008 ம் ஆண்டு அதற்கான நோபல்பரிசைப் பெற்றபோது அந்தப் பரிசளிப்புவைபவத்தையும் சீனா சேர்பியாவுக்காகப் புறக்கணித்திருந்தது. ஆயினும் செர்பியா ஜரோப்பி ஒன்றியத்துள் நுளைவதற்கு முயற்சித்து வருவதனால் தற்போது கடைசி நேரத்தில் சீனாவைக் கைவிட்டுள்ளது.

ஈராக்கும் சீனாவுக்காக இந்தப்பரிசளிப்பைப் புறக்கணித்திருக்கிறது.  ஈராக் சீனாவுடன் மசகு எண்ணை வர்த்தகத்தில் கவர்ச்சிகரமான வருமானத்தைத் தரக்கூடிய 5 ஒப்பந்தங்களை கைசாத்திட்டுள்ளது. அந்த வருமானத்தை ஈராக் இழக்க விரும்பவில்லை. இங்கே முரணணி என்னவென்றால் ஈராக் யுத்தத்தின் விளைவின் பலாபலன்களை அதில் சம்பந்தப்படாத சீனாவும் அனுபவிப்பதுதான்.

மோரொக்கோவும் தனது நாட்டில் மேற்கு சஹாராவின் விடுதலைக்காகப் போராடி வரும் பெண்மணியான  அமினாது ஹைதர் [Aminathu Haidar]  எதிர்காலத்தில் நோபல்பரிசுக்குச் சிபார்சு செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இந்தப் பரிசளிப்பை பகிஸ்கரித்துள்ளது.  அடிப்படையில் மொரொக்கோ எதிர்புரட்சியாளர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுவதை கொள்கை ரீதியாகவும் எதிர்க்கிறது.

வியட்நாமும் நோபல்பரிசு வழங்கப்படும் முறைமையை இதுவரையும் ஏற்றுக் கொள்ளவில்லை.  வியட்நாமின் பழைய தலைமுறை அரசியல்வாதிகள் சீனசார்பு நிலையை கொண்டிருந்தாலும் இம்தலைமுறை மேற்குலகசார்பு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.  இதனால் வியட்நாம் முன்பு போல சீனாவின் உற்ற நண்பன் இல்லை என்ற போதும் அதன் நோபல் பரிசின் மீதான நாட்டமின்மை பிரசித்தமானது . 1973ம் ஆண்டு வியட்நாமின் கம்யூனிஸக் கட்சியின் தலைவர் லி டுக் தோ வும் [ Li Duc Tho] அமெரிக்கரான ஹென்றி கிசிங்கரும் [Hentry kissinger] ஒன்றாக நோபல்பரிசுக்கு  அறிவிக்கப்பட்ட போது அதனைக் காரணங்கள் எதுவும் கூறாமல் வியட்நாம் நிராகரித்திருந்தது.

சீனாவின் கோபம் ஒரு புறம் இருக்க நோபல் பரிசுக் குழுவின் தெரிவுகள் குறித்துக் கவனிக்கும் போது அதன் மேற்குலகசார்பு அரசியலை விமர்சிக்காமல் விடமுடியாது.  அமெரிக்க ஜரோப்பிய வகையிலான முதலாளித்துவ நலன்களைப் பேணும் வகையிலேயே பரிசு பெறுவோர் தெரிவுசெய்யப்படுகின்றார்கள்.

எதிர்ப்புரட்சியாளர்களுக்குப் பரிசு வழங்கும் நோபல் பரிசுக்குழுவின் முடிவு வியப்பைத் தருவதல்ல. ஆனால் அமெரிக்க மற்றும் ஜரோப்பாவில் உள்ள எதிர்ப்பாளர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை.  உதாரணமாக சனநாயக வாதியும் மனித உரிமைவாதியுமான நோம் சோம்ஸ்கி ஒருபோதும் நோபல்பரிசுக் குழுவினரின் கண்களில் படப்போவதில்லை. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் எதிர்ப்புரட்சியாளர்கள் தாராளவாத முதலாளித்துவத்தின் ஒடுக்குமுறை முகத்தை தோலுரித்துக்காட்டுவதால் அவர்கள் நோபல்பரிசுக்கு உகந்தவர்களாகத் தென்படுவதில்லை. பதிலாக ஆப்கானிஸ்தானில் இன்னமும் யுத்தத்தை நடாத்திக் கொண்டிருக்கும் ஓபாமாவும் உலகம் வெப்பமடைதலையும் உலகம் தழுவிய சூழலியல் பிரச்சினைகளையும் வியாபாரமாக்கி அதிகம் பணம் சம்பாதித்த அல்கோரும் நோபல் பரிசுக்குழுவின் கண்களுக்கு தென்பட்டதொன்றும் உலக அதிசயமில்லை. 
அமைதிக்கான நோபல்பரிசு வழங்கப்பட்ட பின்பும் யுத்தங்கள் கூர்மைப்பட்ட வரலாற்றையே கடந்த காலங்களில் காண்கிறோம்
1973ம் ஆண்டில் அமெரிக்கரான ஹென்றி கிசின்ஹர், 1994இல் இஸ்ரேலியரான சிமோன் பெரஸ்சும் ரொபினும் 2000ம் ஆண்டில் தென்கொரிய பிரதமர் கிம் டே-யுங் உம்  [Kim Dae-jung], 2009 இல் ஓபாமாவும் நோபல்பரிசைப் பெற்றிருந்தனர்.  ஆனால் பலஸ்தீனத்திலும் கொரிய வளைகுடாவிலும் ஆப்கானிஸ்தானிலும்  சமாதானமும் அமைதியும் கண்ணுக்கெட்டாத தூரத்திற்குப் போய்விட்டன.
நோபல்பரிசுக்கான செல்வத்தை விட்டுச் சென்ற அல்பிரட் நோபல் வெடிமருந்தையும் ஏவுகணை செலுத்தும்  தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்தவர்.  இதனாலேயே இவர் அளவுக்கதிகமான செல்வத்தையும் சம்பாதித்தார். இவரது கண்டுபிடிப்பின் விளைவால் மரணத்தின் வியாபாரி எனவும் அழைக்கப்பட்டவர்.
அவரது பணத்தை கைகளில் இரத்தம் படிந்தவர்கள் அமைதி அடைவதற்கு வழங்காமல் வேறு யாருக்கு கொடுக்க முடியும் என நோபல் பரிசுக்குழு  அவ்வப்போது நினைக்கிறதோ  என்னவோ!!!
அடிப்படையில் லியூ ஷிஆபோ சீனாவினுள் முதலாளித்துவ சனநாயக மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகிற ஒருவராவார். இதனாலேயே மேற்குலகம் அவரை விடுதலை செய்யக்கோருகிறது. சீனாவின் மக்கள் கூட்டம் இவரைப்பற்றி பெருமளவுக்கு அறிந்திருக்கவில்லை. இவர் பற்றியும் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டமை பற்றியும் சீனஊடகங்கள் கடுமையான தணிக்கையைக் கடைப்பிடித்துள்ளன.
உண்மையிலும் சீனாவுக்கும் மேற்குலகுக்கும் இடையில் உள்ள முரண்பாடு அதிகாரத்துவ முதலாளித்துவத்திற்கும் தாரளவாத முதலாளித்துவத்திற்கும் இடையில் உள்ள முரண்பாடாகும்.
உலகம் தழுவி எழுந்துள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நோபல்பரிசு தொடர்பாக எழுந்துள்ள கோபதாபங்கள் காலப்போக்கில் ஒரு மூலையில் போடப்பட்டுவிடும்  என உறுதியாக நம்பலாம்.
எவ்வாறெனினும் லியூ சீன அரசிற்க்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்த காரணத்தினால் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியிருப்பது எந்த சனநாயகத்திற்கும் பொருந்தாததாகும்.
தியனமென் சதுக்கப் படுகொலைகளில் தொடங்கி இன்றுவரையும் சீனாவின் பிரமாண்டமான அதிகாரச்சுவருக்கெதிராக அடிப்படை மனித உரிமைகளுக்காக லியூ போராடிவருகிறார்
1997 ம் ஆண்டு சீன அரசினால்  சீர்திருத்த முகாமில் அடைக்கப்பட்ட போது அவர் பின் வரும் கவிதையை தனது மனைவிக்கு சமர்ப்பித்து (For Xia)எழுதியிருந்தார்.

எனது அகக்கண்களால் அளவிடமுடியாதபடி
பிரபஞ்சம் அகன்று வெளிறிப்போயுள்ளது.
எனக்கு மழையின் ஒரு துளியைத்தா
இறுகிக் கிடக்கும் இச்சீமெந்துத்தரையைப் பளபளப்பாக்குவதற்கு..
ஒளியின் ஒரு கதிரைத்தா
மின்னல் எதை விரும்புகிறது எனக்காட்டுவதற்கு..
ஒரு சொல்லாவது பேசு
பிறகு இக்கதவைத்திறந்துவிடு
இந்த இரவு தனது வீட்டிற்குப் போவதற்கு ..

* நன்றி- Daan Bronkhorst

ஆசியாவில் சனநாயகம் என்பது அதிலும் குறிப்பாக இந்தியா இலங்கை பாக்கிஸ்தான்  போன்ற நாடுகளில் வெட்கப்பட வேண்டிய கேலிக்கூத்தாகும்.
இந்தியாவில் அருந்ததிராய், தமிழ்நாட்டில் சீமான் இலங்கையில் லசந்த, திசைநாயகம் இன்னும் ஏராளமான தமிழ் சிங்கள பத்திரிகையாளர்கள் என யாவரும் தங்களது கருத்துக்களைப் பேசியதற்காக அல்லது எழுதியதற்காக மரணிக்க அல்லது அளவிட முடியாத இன்னல்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது.
அடக்குமுறைகளுக்கெதிராகவும் கருத்துச் சுதந்திரத்திற்காகவும் பொறுப்புணர்வுள்ள சனநாயகத்திற்காகவும் போராடிக்கொண்டிருக்கிற எந்தச் செயற்பாட்டாளர்களும்  நோபல்பரிசுக்காகக் காத்திருப்பதில்லை.
லியூ ஷிஆபோ வுக்கு நோபல் பரிசை விடவும் முக்கியமானது அவரைப் பேசவும் எழுதவும் வாழவும் விடுவதுதான்.
1.3 மில்லியாட் சனத்தொகையையும் 300க்கும் மேற்பட்ட வகையான மொழிகளையும் இனங்களையும் கொண்ட சீனா, அதிகாரத்தைத்தவிர வேறேந்த வழியிலும் சீனாவை ஒருமைப்பட்ட நாடா  வைத்திருக்க முடியுமென நம்பவில்லை. தியனமென் சதுக்கப்படுகொலைகளே அதற்குச்சாட்சி.
இன்றைக்கு சீனாவினதும் இந்தியாவினதும் மேலாதிக்கக்காய்சலுக்குள் ஊடாடிக் குளிர் காயும் சிங்கள பௌத்த அரசு நிகழ்த்திய  முள்ளிவாய்கால் படுகொலைகளும் வெறித்தனமான அதிகாரத்திற்குச்சாட்சி.
காலத்தை பின்னோட்டிப் பார்க்க முடிந்தால் யுத்த நிறுத்தத்தின் பிற்பாடு பிரபாகரனும் மகிந்தவும் கைகளை குலுக்கிக் கொண்டிந்தால் வெற்றிடமாயிருந்த அந்தக்கதிரையில் சிலவேளை மூன்று பேர் இருந்திருப்பர்.
பிரபாகரன் மஹிந்த எரிக்சொலகைம்.
சீனாவுக்கும் இவ்வளவு கோபம் வந்திருக்காது.

தேவ அபிரா
12-10-2010

நன்றி:
விக்கி பீடியா
த பெர்ஸ்
இணையக்கட்டுரைகள்.