விடுதலைப்புலிகளின் மீதான போரின் போதும் தோல்வியின் பின்னரும் சீனாவின் இலங்கையின் மீதான ஈடுபாடும் இலங்கையின் சீனச் சாய்வும் மிக வெளிப்படையாகி விட்டது .
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் தோல்வியின் பின் நாங்கள் முக்கியமானதொரு இடத்தில் நிற்கிறோம். எங்களையும் எங்களைச் சுற்றி நடப்பவைகளைப் பற்றியும் அறியவேண்டிய தேவை முன் எப்பொழுதும் இல்லாதளவிற்கு அதிகரித்துள்ளது.
உலகம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறியாது போனமையும் தமிழர்களின் இன்றைய அவல வாழ்வுக்கு ஒரு காரணமாகும் . இன்றுவரையும் உலகம் இயங்கிக் கொண்டிருக்கும் முறைமையைப் பார்க்கும் போது தமிழர்கள் ஒரு தனி இனமாக விடுதலை அடைவது சாத்தியமா என்ற கேள்வியும் எழுகிறது.
இது கேள்வி மட்டுமே. கோபம் கொண்டு துப்பாக்கியை தூக்கிக் கொண்டு வரவேண்டாம்.....�
விடுதலைப்புலிகளின் மீதான போரின் போதும் தோல்வியின் பின்னரும் சீனாவின் இலங்கையின் மீதான ஈடுபாடும் இலங்கையின் சீனச் சாய்வும் மிக வெளிப்படையாகி விட்டது .
சீனா தனது கரங்களை உலகம் முழவதும் வியாபித்து வருகிறது. இந்த வியாபகம் எவ்வாறு நிகழ்ந்து வருகிறது என்பதை அவதானிப்பது முக்கியமான படிப்ப்பினைகளைத்தரலாம்.
ஆசிய ஆபிரிக்க அய்ரோப்பியக்கண்டங்களில் சீனாவின் கால் தடங்கள் பதிந்து வருகின்றன.
சீனாவிடம் இருக்கும் அபரிமிதமான அன்னியச் செலாவாணி சீனாவின் நீளும் கரங்களின் இதய நாடியாக இருக்கிறது.
இப்பத்தியில் சீனா எப்படி ஆபிரிக்காவில் தனது கால்களைப் பதித்துள்ளது என்பதைப் பார்ப்போம்.
வளர்ந்து வரும் சீனா பலவேறுபட்ட மூலப் பொருட்களுக்கான அபரிமிதமான தேவையைக் கொண்டுள்ளது. ஆபிரிக்கா சீனாவிற்கு தேவைப்படுகிற பல்வேறு மூலப் பொருட்களைத் தாராளமாக கொண்டிருக்கிறது.
சீனாவின் வியாபகம் இரண்டு வகைகளில் நிகழ்கிறது.
தனிப்பட்ட சீனப் பிரசைகள் வெளிநாடுகளில் வியாபாரங்களிலும் முதலீடுகளிலும் ஈடுபடுகின்றனர்சீன அரசின் முதலீடுகள்.
சீனப்பிரசைகளின் எண்ணிக்கைகளும் முதலீடுகளும் மிகக் குறிப்பிடத் தக்களவில் ஆபிரிக்க நாடுகளில் அதிகரித்துள்ளன.
சீனர்கள் நேரடியாகவே ஆபிரிக்காவிற்கு புலம் பெயர்ந்து சென்று வியாபாரங்களை ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் மிக மலிந்த விலையிலான பொருட்கள் வறிய நாடான ஆபிரிக்காவிற்கு கவர்ச்சிகரமான சந்தையாகும்.
உள்ளாடைகள், மணிக்கூடுகள், ரீ‐சேட்கள், பொம்மைகள், பூட்டுக்கள், குழந்தை உடுப்புகள்இ துவிச்சக்கர வண்டிகள் என எல்லா வகையான பொருட்களும் மலிவு விலையில் கிடைக்கின்றன. பொருட்களின் தரம் குறைந்தவையாகவே இருக்கின்றன.
மற்றயது சீன அரசின் முதலீடுகள்
நான்கு வருடங்களின் முன்பு சீனாவில் நடந்த சீன ‐ஆபிரிக்க கூட்டுழைப்புக்கான அரங்கத்தின் கூட்டத்தில் 54 ஆபிரிக்க நாடுகளில் 48 நாடுகள் தவறாது கலந்து கொண்டிருந்தன. அதேவேளை இதையொத்த இந்தோ‐ ஆபிரிக்க கூட்டுழைப்புக்கான அரங்கத்தின் கூட்டம் 2 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் நடந்த போது 18 ஆபிரிக்க நாடுகளே அதில் கலந்து கொண்டிருந்தன.
இந்தியாவில் ஆட்சி மாற்றங்களின் போது அதன் வெளிநாட்டுக்கொள்கைகளும் மாற்றமடைகின்றன. மேலும் இந்தியாவின் தனியார் துறையே வெளிநாடுகளில் அதிகம் முதலீகளைச் செய்கிறது இந்திய அரசின் முதலீடுகள் மிகக் குறைவு.
சீனாவின் பொருளாதாரக்கொள்கை அடிக்கடி மாற்றமடைவதில்லை அதிகாரமும் மாற்றமடைவதிலை. இதுவும் சீனாவின் வளர்ச்சிக்கு அடிப்டையாகும்.
சீனாவின் முதலீட்டின்‐பேரத்தின் சாரம் இதுதான்: உங்கள் நாட்டின் கனியவளங்களை எங்களுக்குத் திறந்து விடுங்கள் நாங்கள் உங்களுக்கு வீதிகளையும் துறைமுகங்களையும் வைத்தியசாலைகளையும் அமைத்துத் தருகிறோம் என்பதாகும்.
சீனா இந்த உள்நாட்டுக்கட்டமைப்புப் பணிகளை தனது தொழிலாளர்களையும் தனது தொழில்நுட்பத்தையும் கொண்டே செய்கிறது. ஆபிரிக்காவின் தொழில்நுட்பமோ உதவிகளோ இங்கு பயன் படுத்தப்படுவதில்லை. ஆபிரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதாரத்தையோ தொழில் நுட்ப அறிவையோ வளர்ச்சி அடையச் செய்யக் கூடிய கூட்டு ஒப்பந்தங்களாக இந்த உள்நாட்டுக் கட்டுமானப்பணிகள் வடிவமைக்கப்பட வில்லை. மேலும் அமைக்கப்படும் சாலைகளும் துறைமுகங்களும் சீனாவினால் அகழ்ப்படும் மூலப்பொருட்களை சீனாவை நோக்கி கொண்டு செல்வதை இலகுபடுத்தும் நோக்கத்திற்காகவே அமைக்கப்படுகின்றன. எனவே சீனா அமைத்து தரும் உட்கட்டுமானம் உண்மையான ஆபிரிக்க நலன்களின் அடிப்படையிலானதுமல்ல.
மற்றைய முக்கியமான விடையம் ஆபிரிக்காவில் இருக்கின்ற அரசுகளின் ஊழல் பற்றியோ மனித உரிமை மீறல்கள் பற்றியோ அடக்கு முறைகள் பற்றியோ சீனா எந்தக் கேள்வியையும் கேட்பதில்லை.
ஆபிரிக்காவில் இருக்கின்ற அனேகமான ஊழல் நிறைந்த அரசுகள் சீனாவின் இந்தக் கொள்கையால் கவரப்படுகின்றன. அனேகமாகச் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பின்னணியில் அரச தலைவர் தொடங்கி அடிமட்டம் வரை பெருமளவு கையூட்டுக்கள் பரிமாறப்பட்டுள்ளதாக பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.
கோபால்ற், செம்பு, வெள்ளி, நாகம் போன்ற அத்தியாவசியமான மூலப்பொருட்கள் ஆபிரிக்கா முழுவதும் பரவிக் கிடக்கின்றன.
மிக ஊழல் நிறைந்த கொங்கோ தனது கனியக் கிடங்குகளை சீனாவுக்கு எதிர்வரும் 20 வருடங்களுக்கு திறந்து விட்டுள்ளது. 4 தொன்கள் கோபால்ற் பத்து மில்லியன் தொன் செம்பு ஆகியவை இக்காலப் பகுதியில் அகழப்படும்.
இவற்றின் பெறுமதி கிட்டத்தட்ட 9 மில்லியாட் டொலர்கள்ஆகும். அண்மையில் தென்ஆபிரிக்காவும் ரிற்றானியம் என்னும் கனிமத்தை அகழ்வதற்கான அனுமதியை சீனாவுக்கு அழித்துள்ளது. இங்கேயும் அதற்குப் பதிலாகச் சீனா தென்னாபிரிக்காவின் உள்நாட்டுக் கட்டமைப்புக்களை மேம்படுத்தச் சம்மதித்துள்ளது.
தென் சூடானில் பெறப்படும் மசகு எண்ணையைச் சீனாவை நோக்கி கொண்டு செல்வதற்காக கென்னியா தனது இரண்டாவது துறைமுகத்தை கட்டுவதற்கு சீனா முழுமையாக உதவுகிறது.
டாவூர் மாகாணத்தில் மிகக் கொடுமையான இனப் படுகொலையை நடாத்திவரும் சூடான் அரசாங்கத்தை எந்த நிபந்தனையும் இன்றி சீனா, சூடானின் மசகு எண்ணைக்காக ஆதரித்து வருகிறது.
மேலும் சூடானில் மசகு எண்ணை பதனிடும் நிலையங்களை அமைத்தல் விவசாயத்தை அபிவிருத்தி செய்தல் ஆகிய துறைகளில் சீனா அதிகளவு முதலீடுகளைச் செய்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் சூடான் மீது கொண்டுவரப்படும் தடைகளுக்கு எதிராகச் சீனா செயற்பட்டு வருகிறது. மேலும் சூடானிற்கு ஆயுத விற்பனைத் தடை இருப்பதனால் சூடான் தானாகவே ஆயத தயாரிப்புச் சாலைகளை நிறுவியுள்ளது.இதன் பின்னணியில் சீனா இருப்பதாகக் கூறப்படுகிறது.
கானாவில் இருந்து சீனா கழிவுச் செம்புப் பொருட்கள், பழைய இரும்பு, மரப்பலகை, றபர்இ கொக்கோ ஆகியவற்றை வாங்கிக் கொள்ளும் இலாபகரமான ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.
எகிப்தில் கார்கள் அவற்றுக்கான உதிரிப்பாகங்கள் என்பவற்றை உற்பத்தி செய்யவும் ஏற்றுமதி செய்யவும் கூடிய வசதிகளைக் கொண்ட உற்பத்திச் சாலைகளை அமைக்கிறது.
அல்ஜீரியாவில் எண்ணை வளங்களை எதிர்காலத்தில் அகழும் நோக்குடன் அல்ஜீரியாவிற்கு புதிய விமான நிலையத்தையும் 60,000 புதிய வீடுகளையும் ஆபிரிக்காவில் மிக நீண்ட வீதியையும் அமைத்துக் கொடுக்கிறது.
கமரூனில் கனிப்பொருட்களையும் மரத்தையும் பெறுகிறது.
மேலோட்டமாக பார்க்கும் போது இவை யாவும் வியாபார நலன்களாகத் தோன்றுகின்ற போதும் அடிப்படையில் தனது சந்தைகளைக் காப்பாற்றும் நோக்குடன் தனது ராணுவத்தையும் பலப்படுத்தியே வருகிறது.
சந்தைகளைக் காப்பாற்ற இராணுவ பலத்தை அதிகரித்தல் இராணுவ பலத்தை அதிகரிக்க சந்தைகளை விரிவு படுத்தல் என சீனா அடைந்து வரும் வளர்ச்சி யாவரையும் அச்சம் கொள்ள வைக்கிறது.
ஒன்றுமட்டும் தெளிவாக தெரிகிறது தனது நலன்களை பேணும் அரசுகளை சீனா பாதுகாத்து வருகிறது. அவை எந்த வகையான அரசுகளாக இருந்த போதும். பர்மா, வடகொரியாஇ சூடான்இ கொங்கோ, பாகிஸ்தான், கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில் சீனாவின் கரங்கள் வலிமையானதாக உள்ளன.
இதனால் தான் அந்தந்த நாடுகளின் அரசுகள் தமது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கு சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளன.
இலங்கையிலும் சீனா துறைமுகங்களையும் வீதிகளையும் அமைத்துவருகிறது. சீனாவின் அரவணைப்பில் மகிந்தவும் மகிந்த குடும்பமும் நீண்டகாலத்திற்கு இலங்கையை ஆளப்போகிறார்கள்....
GTN ற்காக தேவன்
(2) அபிப்பிராயங்கள்
06-12-2010, 17:03
- Posted by Anonymous
அவசியமான பரந்த ஆய்வு.
06-12-2010, 17:03
- Posted by Anonymous
சீனா உலக பொருளாதாரத்தில் இந்தியாவை விடவும்...முன்னிற்கின்றது....இலங்கையில் சீனா ஆதிக்கத்தை அதிகப்படுத்தி வருகின்றது...இதில் எவ்வித இரகசியமும் இல்லை..நம்மில் சிலர் இந்தியாவை பூச்சாண்டி காட்டுகின்றோம்.. இலங்கைக்குள் சீனா புகுந்து விட்டது... இது இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தலாயிருக்கும்....என்று இந்தியாவுக்கு புத்தி சொல்வதோடல்லாமல்..இந்தியா தமிழர்பால் அக்கறை கொள்ளாததால் தான் இவை போன்ற விடயங்கள் நிகழ்கின்றன.எனவே இந்தியா தமிழர்களை ஆதரிப்பதனூடாக தன்னையும் காப்பாற்றி தமிழருக்கும் உதவும் வகை செயற்பட வேண்டும்..என தமிழர் தரப்பில் அடிக்கடி அறிக்கைகள் வெளிவருகின்றன...இதனால் தான் இந்தியா நம்மை சந்தேகத்துடன் பார்க்கின்றது... நமக்கே நமது நாட்டின் மீதில்லாத அக்கறை ஈழத்தமிருக்கு எதற்கு.. இதிலேதும் உட்குத்து இருக்குமோ என்ற வகையில் சிந்திப்பது போல் தெரிகின்றது....இந்தியா சீனாவுடன் பகைமை பாராட்ட விரும்பவில்லை.காரணம் இந்தியாவுக்கு நாம் மனதில்கட்டி வைத்திருக்கும் அளவுக்கு பலமில்லை.. வெறும் வாய்சவாடல்கள்தான் அதிகம்...அடிப்படையில் அது ஒரு கோழை...சீனா ஓங்கி அடித்தால்...சிதறி போகும்..எமக்கு சீனாவை பிடிக்காது என்பதற்காக அதன் வலிமையை தவறாக எடை போடக் கூடாது...
அபிப்பிராயத்தை இணைக்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக