Thestar.com இல் வெளியான Rick Westhead என்பவரால் எழுதப்பட்ட போருக்குபின்னான இலங்கை நிலவரங்கள் பற்றிய கட்டுரை குளோபல் தமிழ்ச் செய்திகளால் மொழிபெயர்க்கப்பட்டு கிளே தரப்படுகிறது மொழிபெயர்ப்பு கீழே தரப்படுகிறது.
இக்கட்டுரையை அவர் வளரும் இலங்கையுள் தமிழர்களின் வாழ்க்கை நம்பிக்கையிழந்து தனித்திருக்கிறது என்னும் தலைப்பில் எழுதியிருக்கிறார்.
வளரும் இலங்கையுள் தமிழர்களின் வாழ்க்கை நம்பிக்கையிழந்து தனித்திருக்கிறது
எங்களுடைய கொதலூப்பே கத்தோலிக்க தோவாலயத்தின் காற்றிலும் மழையிலும் கிடந்து பண்பட்ட பாவமன்னிப்பு கோரப்பயன்படும் திறந்தவெளி இருக்கை இந்த நாட்களில் நிரம்பி வழிகிறது. இக் கடற்கரையோரத் தேவாயலத்தினை நோக்கி நிறைய மக்கள் பாவமன்னிப்புக் கோர வருகின்றார்கள் என யாராவது நினைத்தால் அது தவறாகும்.
வன்முறையும் பயமும் நிறைந்த கடந்த காலங்களில் இருந்து நம்பிக்கையைக் கட்டி எழுப்புவது எப்படி என அருட்தந்தை கிரித்தொன் அவுட்சோர்ன் நம்பிக்கை தொனிக்கக் கூறுவதைக் கேட்க‐ ஒரு மாற்றத்திற்காக மத நம்பிக்கை உடையவர்கள் அந்தத் தேவாலயத்தை வந்து நிறைக்கிறார்கள்.
இங்குள்ள மக்கள் எப்பொழுதும் ஒரே கேள்வியையே கேட்கிறார்கள் போலத் தோன்றுகிறது. அடுத்து இனி எங்களுக்கு என்ன நடக்கும் என்பதேயது இம்மக்களுக்கு மிக இலகுவாக ஆழ்ந்த அனுதாபங்களைமட்டும் வழங்கி விட முடிவதில்லை.
35 வயதான அருட்தந்தை கடந்து போன காலைப் பொழுதொன்றில் பின்வருமாறு கூறினார்.
இப்பொழுதும் இலங்கையில் வாழ்க்கை இலகுவானதாக இல்லைத்தான் ஆனாலும் முன்பிருந்ததை விட நன்றாக இருக்கிறது. வருடக்கணக்காக நீங்கள் அமைதிக்காக பிராத்தித்தீர்கள் கடைசியாக அது உங்களுக்கு கிடைத்திருக்கிறது. இது உங்களது பிராந்த்தனையின் பலன் என நான் அவர்களுக்கு நினைவுபடுத்துகிறேன் .
அவுட்சோர்ன்னின் நினைவுபடுத்தல் எல்லா மக்களுக்கும் நம்பிக்கை தருவதாக இருக்கவில்லை. சில இலங்கையர்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குவதற்கு கஷ்டப்படுகிறார்கள். ஒரு நச்சுத்தன்மையான வரலாற்றின் நீட்சியாக 1975 ம் ஆண்டு தொடங்கிக் கடந்த வருடம் மே மாதம் வரையும் நீடித்த உள்நாட்டுப் போர் 70000 ஆயிரம்பேரின் உயிரையும் காவு கொண்டு சமூகங்களையும் பிளவு படுத்திவிட்டுச் சென்றிருக்கிறது.
ஒரு புறத்தில் இந்தத் தீவுக்கு இந்தியாவின் தென்கரையில் இருந்து வரும் செய்திகள் குறிப்பிடத்தக்களவு சாதகமாகவே இருக்கின்றன.
இலங்கை அரசு வெளிநாட்டுநாணயவருமதி இலங்கையில் அதிகரித்துள்ளது என்றும் தற்கொலைத் தாக்குதல்களும் நிலவெடிகளும் கடந்த கால வரலாறுகளாக மாறிவிட்டன என்றும் கூறுகிறது. பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தை விடக் குறையவில்லை எனவும் வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்து வருகிறது எனவும் நாணய மதிப்பிறக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அரசாங்கம் கூறுகிறது.சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட வரியிறுப்பாளர் கட்டமைப்பு புதிய வரி வருமானத்தை உறுதி செய்யும் எனவும் அது கூறுகிறது.
தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே வரக்கூடிய துயரக்கதைகள் அவர்களிடம் உள்ளது எனச் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியும் அமெரிக்கருமான கொமாத்தை கூறுகிறார்.
தென்னை மரங்களும் பனைமரங்களும் நிறைந்த இந்த தேசத்தின் பகுதிகளில் அரசு தரும் விம்பத்துக்கு மாறுபட்டதாக நீண்ட காலங்களாகப் பாடுகளைப்பட்ட மக்களிடம் வேறுவிதமான அனுபவங்கள் உள்ளதாக அவர்களை நேர்காணல் கண்டவர்கள் கூறுகிறார்கள். உணவுப் பொருட்கள், எரிபொருட்கள் என யாவும் இன்னும் உயர்ந்த விலையிலேயே உள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்.
உள்ளூராட்சி சபைகளுக்கும் மாகாண சபைகளுக்கும் அதிக அதிகாரங்களைப் பகிரப் போவதாக அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவே இல்லை என்கிறார்கள்.
உடைந்த வீதிகளையும் பாலங்களையும் இன்னும் உடைந்த மனங்களையும் திருத்தப் போவதாக இலங்கையின் சனாதிபதி சத்தியம் செய்கிறார். ஆனால் அபிவிருத்தி என்பது இலங்கையின் மேற்கிலும் தெற்கிலும் மட்டுமே செய்யப்படுவதாகச் சிலர் கூறுகிறார்கள். ஜிரின் இலங்கையின் பெரும்பான்மை இனமான சிங்கள் இனம் மட்டுமே இதனால் நன்மை அடைவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் தமிழர்களின் இதய நிலமான வடமானிலம் கைவிடப்பட்டதாக உள்ளது. மேலும் வடமானிலத்தில் நடப்பவைகள் பற்றி எதையும் அங்கு தொழில் புரியும் பத்திரிகையாளர்கள் அச்சம் காரணமாக அறிக்கையிடுவதில்லை. அவர்கள் சுய தணிக்கையைப் பின்பற்றுகிறார்கள். அவர்களது வெளிநாட்டு நிறுவனங்களுக்கான அறிக்கையிடல் கடுமையாகத் தடுக்கப்பட்டுள்ளது.
வன்கூவரில் சண் சீ கப்பலில் வந்திறங்கிய 492 அகதிப்புகலிடக் கோரிக்கையாளர்களும் நான் மேற்குறித்த இலங்கையின் வடமானிலத்தை தமது வீடு என்கிறார்கள்.
இலங்கைத் தேசிய சமாதானம் பேரவையின் நிறைவேற்று அதிகாரி ஜெகன் பெரேரா அண்மையில் தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு மீளக் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களை பார்வையிடச் சென்றிருந்தார். அவர்களை அரசு எவ்வாறு மீள்குடியேற்றம் செய்துள்ளது எனப் பார்ப்பதே அவரின் நோக்கமாகும்.
புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் யுத்தம் மூண்ட போது 300,000 க்கும் அதிகமான மக்கள் பலவந்தமாக அவர்களது வாழிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். தற்பொழுது 20000 மக்கள் மட்டுமே தமது நலன்புரிமுகாம்கள் என அழைக்கப்படும் முகாம்களில் இருப்பதாக அரசு கூறுகிறது.
A‐9 எனச் சொல்லப்படும் வடக்கு நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் இருந்து உள்ளிறங்கிப் பல கிலோ மீற்றர்கள் சென்ற பின்னரே மீள் குடியிருப்புத் திட்டம் ஒன்றைத் தான் அடைந்ததாக பெரேரா குறிப்பிட்டார். அந்த மக்கள் அடிப்படையில் சிறு குடில்களில் மின்சார வசதியோஇ கழிப்பறை வசதியோ எதுவும் இன்றி வசிக்க விடப்பட்டிருக்கிறார்கள் வேலை வாய்ப்புக்களுக்கான எந்த நம்பிப்கைகளும் இன்றிக் கைவிடப்பட்டிருக்கிறார்கள். இரவுகளின் கும்மிருட்டில் நச்சுப்பாம்புகளின் நடமாட்டம் பற்றி அவர்கள் அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கனடாவில் இருக்கின்ற எல்லாத் தமிழ் அகதிகளையும் அழைத்து வந்து இங்கு இவ்வாறு மீளக்குடியேற்றம் செய்ய வேண்டும் எனச் சொல்லச் சிலருக்கு மனம் வருகிறதை நினைக்கும் போது......
கடவுளே இந்த மக்களுக்கு தற்காலிக ஓய்வையேனும் கொடுக்க முடியாதா என நினைத்தேன்.
ஆனால் இலங்கைக்கு வருகிற ஒரு விருந்தாளிக்குப் பின்தங்கிய இந்தப் பகுதிக்கு வந்து இந்தத் துன்பமான காட்சிகளைக் காணவேண்டும் என்று என்ன தேவை இருக்கிறது. அடிப்படை வசதிகளை இந்த மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்பதில் இந்த நாடு இன்னும் எவ்வளவு பின் தங்கிய நிலையில் உள்ளது என்பதைக் காண அவர்களுக்கு வாய்க்காதுதான்!
இந்தமாதம் பொலிஸ் அதிகாரிகள் கொழும்பு வாழ் தமிழ் மக்களை மீண்டும் காவல் நிலையங்களில் வந்து தம்மைப் பதிவு செய்யுமாறு வலியுறுத்தியதாக கொழும்பில் இருந்து வெளியாகும் வீரகேசரிப் பத்திரிகை குறிப்பிட்டு இருந்தது.போர் முடிந்து ஒரு வருடங்களாகியும் இன்னமும் தமிழ் மக்கள் மீது காவல் துறை கொண்டுள்ள அவநம்பிக்கைத் தன்மையையே இந்த நடவடிக்கை சுட்டுவதாக தமிழ் அரசியல்வாதியான மனோ கணேசன் கூறுகிறார்.
கொழும்பில் இயங்கும் சியத ஒலி ஒளி பரப்புக் கூட்டுத்தாபனத்துள் முகமூடி அணிந்த காடையர்கள் சிலர் புகுந்து பணியாளர்கள் அனைவரையும் அடித்து நிறுவனத்திற்கு நெருப்பும் வைத்து சென்ற சில நாட்களின் பின்னரே தமிழ் மக்களைப் பதியக்கோரும் இந்த செய்தியை வீரகேசரி வெளியிட்டிருந்தது. ஜிரின் சியத ஊடக நிறுவனம் சனாதிபதித் தேர்தலில் தற்போதய சனாதிபதியின் எதிர்வேட்பாளரான சரத் பொன்சேக்காவை ஆதரித்ததன் மூலம் அரசின் கோபத்திற்கு ஆளாகி இருந்தது.
உயர் பாதுகாப்பு வலையத்தினுள் எல்லாவிடத்திலும் சோதனைச் சாவடிகள் நிறைந்திருந்த பகுதியில் அமைந்திருந்த அந்த ஊடக நிறுவனத்துள் 15 நிமிடங்களுக்கு மேலாக நின்று அட்டகாசம் புரிந்து விட்டு முகமூடி அணிந்தவர்கள் சென்று விட்டனர். இச் செயற்பாட்டை அவதானிக்கும் போது ஆயுதம் தாங்கிய, அளவுக்கு அதிகமான காவல் துறையினரால் கொழும்பு பாதுகாக்கப்படுகிற போதும் அது பாதுகாப்பாக இல்லை எனத் தெரிகிறது அல்லது சியத நிறுவனத்தின் மீதான தாக்குதல் இராணுவ அல்லது காவல்துறையினரின் ஆசியுடனேயே நடாத்தப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது என ஏசியன் ரிறிபியூன் தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இன்னும் சில மனித உரிமை ஆர்வலர்கள் த எக்கொனொமிஸ்ற் சஞ்சிகை கிரமமான முறையில் இலங்கைச் சுங்கத்திணைக்களத்தினால் தடைசெய்யப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இலங்கையில் நடக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் கட்டுரைகளை அந்தச்சஞ்சிகை பிரசுரிக்கும் போதெல்லாம் இவ்வாறு நடப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
யுத்தத்தின் இறுதி நாட்களில் நிகழ்ந்த விடையங்களை விசாரணை செய்ய விரும்பும் ஜக்கிய நாடுகள் சபையின் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் இலங்கை அரசு மறுத்து வருவதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
இலங்கையின் எதிர்காலத்தை எண்ணித் தான் கவலைப்படுவதற்கு பல காரணங்கள் இருப்பதாக பெரோரா கூறுகிறார். ஊடக சுதந்திரமின்மை அவற்றுள் ஒன்று என்கிறார் அவர்.
கடந்த மாதம் இலங்கையில் கொண்டு வரப்பட்ட அரசியல் அமைப்புத்திருத்த சட்டம் மூலம் தற்போதைய சனாதிபதி மூன்றாம் தடவையும் அதிகாரத்துக்கு வரக்கூடிய வழியை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.இவை மட்டுமின்றி நாட்டின் காவல்துறை அதிபர், உயர்நீதிமன்ற நீதிபதி ,மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர், மற்றும் தேர்தல் அதிகாரி போன்றவர்களை நியமிக்கவும் விலக்கவும் கூடிய அதிகாரத்தையும் சனாதிபதி பெற்றுக் கொண்டுள்ளார்.
அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுத்து அவை சரியாக தொழிற்படுகின்றனவா எனக் கண்காணித்து சமநிலையைப் பேணும் ஆட்சி அதிகார முறைமைகள் யாவும் உடைந்து வருகின்றன என பெரேரா கவலைப்படுகிறார்.
அதே வேளை சிறுபான்மை இனங்களுக்கு வழங்க வேண்டிய அரசியல் தீர்வு பற்றி எள்ளளவும் கவலைப்படாத போக்கே இங்கு நிலவுகிறது. காயங்களுக்கு மருந்து தடவுவதை விடுத்துக் காயங்களைப் பெரிதாக்கும் வேலையையே இந்த அரசாங்கம் செய்து வருவதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
பகுதி இரண்டு
இந்த நாட்டின் வளர்ச்சியைப் பல்லாண்டுகளாகத் தடுத்து நின்ற இரக்கமில்லாத பிரிவினைவாதிகளான விடுதலைப் புலிகளின் நகரமான யாழ்ப்பாணம் சன்னங்களால் துளைக்கப்பட்ட சிதைந்த கட்டிடங்களைச் சுமந்து நிற்கிறது. இந்த நகரத்தில் இருந்த விடுதலைப்புலிகளின் நினைவுச் சின்னங்களையும் துயிலும் இல்லங்களையும் இலங்கை இராணுவம் அழித்துவிட்டதுடன் போரில் மடிந்த சிங்கள் இராணுவ வீரர்களுக்கு ஞாபகச் சின்னங்களையும் எழுப்பி வருகிறது.
ஜக்கிய நாடுகள் சபையின் ஆணைக்குழுவின் தலைவரும் கனடாவைச் சேர்ந்தவருமான நீல் புனே பின்வருமாறு கூறுகிறார்.
இலங்கையின் வடபுலத்துமக்கள் இந்தச் செயலினால் மிகவும் கோபமடைந்திருக்கிறார்கள். நாட்டின் மொத்த இழப்பையும் குறிக்கும் நினைவுச் சின்னமாக ஏதேனும் வைக்கப்பட்டால் அதனைப்பிழை சொல்லமுடியாது என அவர்கள் நினைக்கிறார்கள். ஜிரின் தமிழ் மக்கள் மிகத் துன்பமான நரகத்தனமான காலத்தைக் கடந்து வந்திருக்கிறார்கள். மாவீரர் துயிலும் இல்லங்களை இடிப்பதும் இறந்து போன இலங்கை இராணுவ வீரர்களுக்கு சமாதி கட்டுவதும் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு உதவாது. இவ்வாறு அரசாங்கம் செய்யத் தேவை இல்லை
இலங்கையின் கிழக்கு நகரங்களான திருகோணமலையும் மட்டக்களப்பும் உள்நாட்டுப் போர் கொடூரமாக நடந்து கொண்டிருந்த காலங்களிலேயே 2004 ல் சுனாமியாலும் தாக்கப்பட்டது.
மட்டக்களப்பின் பிரதான வைத்திய சாலையில் தினமும் போராலும் சுனாமிலாலும் ஏற்பட்ட பாதிப்புக்களை வெளிப்படுத்தும் பெருந்தொகையான பெண்களைக் காணமுடிகிறது.
நாங்கள் தினமும் குறைந்தது பத்துப்பேரையாவது வைத்திய சாலையில் அனுமதிக்க வேண்டி ஏற்படுகிறது.போரின் பின் ஏற்பட்ட தனிமை, மற்றும் பல்வேறு காரணிகளால் மன அழுத்தத்துக்குள்ளான தமது கணவன்மார்கள் மதுவையோ போதைப் பொருட்களையோ நாடுவதாக அந்தப் பெண்கள் தெரிவிக்கிறார்கள் என மனநலப் பராமரிப்பாளரான ஜெயதீப பதசிறீ தெரிவிக்கிறார்.
போர் முடிந்து 14 மாதங்களின் பின்பு ‐ போர் முடிந்து விட்டதாக அரசு அறிவித்து ஒரு மாதத்தின் பின்பு வாடகைக் கார் ஓட்டுனரான தனது கணவர் வேலைக்கு சென்ற பின் இன்றுவரையும் வீடு திரும்பவில்லை என ஒரு பெண் கூறினார். தன்னையும் தம்மகளையும் பார்த்துக் கையசைத்து இரவு வீடு திரும்புவேன் எனக் கூறிச் சென்ற கணவனை அந்தப் பெண் பிறகு காணவே இல்லை. கடத்தப்பட்ட 26 வயதான வாடகைக் கார் ஓட்டுனரின் தம்பி விடுதலைப்புலிகளின் உறுப்பினராகும். ஆனால் கடத்தப்பட்டவர் புலி அல்ல என ஜெயதீப பதசிறி கூறுகிறார்.
மண்ணிற ஊசியினால் இறுக்கப்பட்ட நேர்த்தியான கொண்டையுடன் பழுப்பு மஞ்சள் சேலை அணிந்தபடி வேலைசெய்யும் பதசிறீ அரசாங்கப் படைகளே அந்தப் பெண்ணின் கணவனைக் கடத்திச் சென்றதாகவும் ஆனால் இப்படி ஆயிரம் கதைகள் உள்ளதாகவும் கூறுகிறார்.
யுத்தத்தின் பின்னான வாழ்வைக் கட்டி எழுப்புவதற்கு பலர் தடுமாறுவதாக பதசிறி சொன்னாலும் அதே நேரத்தில் பலர் தமது வாழ்வை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு விருப்பம் கொண்டவர்களாக இருக்கின்றனர். கடந்த பல வருடங்களாக கட்டியெழுப்ப முடியாமல் இருந்த வாழ்வை கட்டி எழுப்புவதற்கும் முன்னேறுவதற்கும் அவர்கள் விளைகிறார்கள்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் அவர்கள் இருந்து காலங்களில் தனது வீட்டை திருத்திப் புதுப்பிக்க ஒருவர் முயற்சி செய்தால் உடனேயே விடுதலைப் புலிகள் வந்து போராட்டத்திற்கு நிதி உதவி செய்யும்படி கோரிய சம்பவங்களையும் நினைவு கூறுகிறார்கள்.
வீட்டில் சன்னமிட்ட துளைகளை அடைக்க ஒருவரிடம் காசு இருக்கும் என்றால் போராட்டத்திற்கு பங்களிக்கவும் ஒருவரிடம் காசு இருக்கும் என அவர்கள் கருதினார்கள் என ஒரு உணவுக்கடை உரிமையாளர் ஒருவர் பெருமூச்சுடன் கூறினார். 2000ம் ஆண்டு வரையும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கில் தற்பொழுது மாயை இல்லாத நம்பிக்கையின் துளிகள் தோன்றியுள்ளன.
கொழும்பில் இருந்து கிழக்கு நோக்கிச் செல்ல வசதியற்ற சந்தோசமில்லாத ஒன்பது மணிநேரப் பயணத்திற்கு துணிய வேண்டியிருக்கிறது. அந்தப் பயணத்தின் போது வீதியோரம் நிறைந்து கிடக்கின்ற இரும்புகளையும் சீமெந்து மூட்டைகளையும் காணமுடிகிறது. திருகோணமலை மட்டக்களப்பு வீதி வரும் மாதங்களில் திருத்தப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ் வீதி திருத்தப்பட்டால் திருகோணமலை மட்டக்களப்பு பயணம் 2 மணித்தியாலங்களாக சுருங்கிவிடும் எனக் கருதப்படுகிறது.
வர்த்தகம் கிழக்கில் தளைக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் எயர்ரெல் நிறுவனம் கிழக்கு மாகாணத்துள் நுளைந்துள்ளது. உள்ளூர் வியாபாரத்தை அது வளர்க்கிறது. அண்மையில் யுனிலீவரின் அதிகார பீடம் இருபது உள்ளூர் வினையோகத்தர்களுக்கு ஆற்றங்கரை விடுதி ஒன்றில் ஆடம்பர விருந்துபசாரம் ஒன்றைச் செய்திருந்தது.
யுனிலிவரின் தற்போதய மாதாந்த விற்பனை 500,000 டொலர்களுக்கும் மேலே என அதன் பிராந்திய முகாமையாளரான பசில் பெர்னான்டோ தெரிவித்தார். இரண்டு வருடங்களின் முன்பு தான் வந்த போது அது 280,000 டொலர்களாக இருந்ததாகக் கூறினார்.
பச்சைச் சேலை அணிந்து கால்களில் சலங்கை கட்டி உள்ளூர்ப் பாரம்பரிய தமிழ்ப் பாடலுக்கு இளம் பெண் நடனம் ஆடுவதைப் பார்த்தவாறு உள்ளூர் வினையோகத்தர்கள் தென்னஞ்சாராயத்தையும் கோழிக்கால்களையும் சுவைத்துக் கொண்டிருந்தனர். சுவரில் தொங்கிய பதாகையில் யுனிலீவரின் 10 ரூபா வெண்ணைக்கட்டி ‐குளிர்சாதனப்பெட்டி தேவைப்படாதது ‐மற்றும் புதிய லக்ஸ் சவர்க்காரச்கட்டி என்பவற்றின் விற்பனையை ஊக்கப்படுத்தும் விளம்பரம் காணப்பட்டது.
பெர்னான்டோ அவை விரைவாகவும் அதிகமாகவும் விற்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இது மிகவும் செலவான விருந்து தான் ஆனால் வியாபாரத்திற்கு மிகவும் அவசியமானது எனச் சிரித்தபடி பதில் கூறினார். சந்தை விகசிக்கிறது என்கிறார்.
இவ்வாறான முன்னேற்றகரமான செய்திகள் திருகோணலைப் பகுதியில் இருந்தும் வருகின்றன. சீமெந்துஆலை மாஆலை மற்றும் மீன்பிடி என்பனவே இந்நகரத்திற்கு வேலை வழங்கும் மூலங்களாகும். இராணுவம் தற்போதும் ரோந்து வருகின்ற போதும் வீதி நீளமும் காணப்பட்ட இராணுவக் காவல் அரண்கள் அகற்றப்பட்டது வாழ்க்கையை இலகுவாக்கி உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
உள்ளூர் மீனவர்கள் தற்போது இரவிலும் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். போர் நடந்த காலத்தில் இது சாத்தியமற்று இருந்தது.
இராணுவம் உள்ளூர் மக்களிடத்தில் தனக்கு இருக்கும் படிமத்தை திருத்துவதற்காக ஒரு புதிய அளிக்கை நிகழ்வை தொலைக்காட்சியூடாக ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளது. அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சியான( Americas Got Talent) அமெரிக்கா விற்பன்னர்களைக் கொண்டுள்ளது என்பதை ஒத்த நிகழ்ச்சி ஒன்றை அது ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இராணுவத்தினர் ஆடல் பாடல் மற்றும் அளிக்கைகளில் தங்களுக்குள் போட்டியிடுவது நேரிடையாக ஒளிபரப்பு செய்யப்படும். இதன் மூலம் இராணுவத்தினரும் மக்களே என்னும் எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த விரும்புகின்றனர்.
28 வயதான கடற்கரையோர விடுதி ஒன்றின் முகாமையாளரான துசி பொன்னம்பலம் எதிர்காலத்தில் தனது விடுதியை விஸ்தரிக்க யோசிக்கிறார். 10 அறைகள் கொண்ட இவ்விடுதியில் தங்குவதற்கு ஒரு இரவுக்கு 1500 ரூபா செலவாகிறது.
எவ்வளவு காலம்தான் சண்டை பிடிக்கிறது. அதிலை ஒரு எதிர்காலமும் இல்லை என்னும் பொன்னம்பலம் மேலும் சொல்கிறார். ஜிரின் 1990 ம் ஆண்டு இராணுவச் சோதனைச் சாவடியில் அவரது தகப்பனை இராணுவம் மறித்தது என்றும் அவரது தகப்பனார் தவறு எதுவும் செய்யவில்லை என்ற போதும் இராணுவத்திற்கு கொடுப்பதற்கு காசு எதுவும் வைத்திருக்கவில்லை என்பதால் இராணுவம் அவரைத் தலையில் சுட்டுக்கொன்றது .
யாவும் ஒரு வகையில் அரசியல்தான் நாங்கள் கவலைப்பட்டுக் கொண்டு கடந்த காலத்திலேயே வாழலாம் அல்லது முன்னோக்கி நகரவேண்டும். நான் முன்னோக்கிச் செல்லவேண்டும் என நினைக்கிறேன். என்கிறார்.
பகுதி மூன்று
இலங்கையின் வடமாகாணம் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 க்கும் குறைவான பங்கையே இந்த வருடம் அளித்துள்ளது. அரசாங்கத்தின் கணிப்பீடுகளின் படி வடபகுதியில் தற்போது பணப்புழக்கம் ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணதிற்கு அருகாமையில் அமெரிக்கா லெவி( Levis )மற்றும் J.C. Penney நிறுவனத்தின் தமிழ்வாடிக்கையாளர்களுக்காக புதிய ஜீன்ஸ் தயாரிப்பு நிலையங்களை ஆரம்பிப்பதற்கு முதலிட்டுள்ளது. ஓகஸ்ற் மாத ரைம்ஸ் சஞ்சிகையின்படிக்கு A‐9 சாலைக்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவுக் கடைகளும் விடுதிகளும் உள்ளூர்த் தமிழர்களுக்குச் சொந்தமானவையாக இருக்கின்றன.
இந்தியா 850 மில்லியன் டொலர்களை குறைந்த வட்டியில் வழங்க உள்ளது. வடக்கு கிழக்கை புனர் அமைப்பதற்கும் 50000 புதிய வீடுகளை அமைப்பதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறே சீனாவும் இலங்கை அரசின் கவனத்தைப் பெறுவதற்காக 500 மில்லியன் உதவித் தொகையை வழங்க உள்ளது. புதிய துறைமுகங்கள் மின்னிலையம் மற்றும் கிழக்கில் ஒரு பிரதான வீதி என்பவற்றையும் திறப்பதற்கு அது பயன்படும் எனக் கூறப்படுகிறது.
வெளிநாட்டு முதலீடுகள் உள்வருகிறதுடன் தினமும் கொழும்பில் வெளியாகும்ஆங்கிலப் பத்திரிகைகளின் தலையங்கங்களை இவ்வாறான நற்செய்திகள் நிறைந்தும் வருகின்றன. அதேவேளை சில இலங்கையர்கள் ராஜபக்ஸ அரசின் அதிகாரத்தின் மீதுள்ள மோகத்தை எண்ணிக் கவலைப்படுகிறார்கள்.
கிழக்கு மாகாணத்தில் முன்னாள் குழந்தைப் போராளியும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினருமான பிள்ளையான் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாண அரசின் முதலமைச்சராக இருக்கிறார். ஆயினும் கிழக்குமாகாணத்தின் அரசினால் நியமியக்கப்பட்ட ஆளுனர் சகல அதிகாரங்களையும் கொண்டவராக இருக்கிறார். இவரும் முன்னாள் இராணுவ அதிகாரியாவார். மாகாண சபை எடுக்கின்ற எந்தச் சட்டரீதியான நடவடிக்கையையும் தடுத்து நிறுத்தும் அதிகாரம் இவரிடம் உள்ளது.
2008 ம் ஆண்டு கிழக்கு மாகாண சபை கொண்டுவந்த ஒரு சட்டமூலத்தை ஆளுனர் தனது அதிகாரத்தின் மூலம் தடுத்து விட்டிருந்தார்.
அந்தச் சட்டமூலமானது கிழக்கு மாகாண சபைக்கு மோட்டர் வாகன அனுமதிப் பத்திரங்களை வழங்கும் அதிகாரத்தை ஏற்படுத்தித்தருவதாகும். இதன் மூலம் கிழக்கு மாகாணம் ஒருவருடத்திற்கு ஒரு பில்லியன் ரூபாக்களை பெற்றுக் கொள்ளக்கூடியதாகவிருந்திருக்கும் என முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினரும் இன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஆலோசகருமான திரு விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அண்மையில் புலம் பெயர்ந்தவர்களிடம் இருந்து நேரடியாக நிதி திரட்டும் திட்டத்தை அங்கீகரிக்கும் கிழக்கு மாகாண சபையின் சட்டமூலத்தையும் ஆளுனர் தடுத்து விட்டார் என அவர் மேலும் கூறினார்.
அரசாங்கம் வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்கள் பொருளாதார ரீதியாக உயர்வதை விரும்பவிலை எனவும் அவர் சொன்னார்
திருகோணமலையிலும் வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை அமைத்து வருவது பற்றியும் மக்கள் கவனம் கொள்கிறாரகள்.
குறைந்த விலையில் நிலங்களையும் நல்ல தொழில் வாய்ப்புக்களையும் தென்பகுதிச் சிங்களவர்களுக்கு வழங்குவதன் மூலம் அரசாங்கம் அவர்களை வடக்கில் குடியேறுமாறு தூண்டிவருகிறது.
அண்மையில் மத்திய அரசாங்கம் திருகோணமலையில் 50 நிலத்துண்டுகளை கிட்டத்தட்ட இலவசமாகவே வழங்கவிருந்ததாக திரு விக்னேஸ்வரன் கூறுகிறார். இவை உல்லாசப் பயணிகளுக்கான விடுதிகளை கட்டுவதற்கான இடங்களாகும். ஆயினும் ஒரு தமிழரும் அந்நிலத்தை வாங்கிப் புதிய விடுதிகளை அமைக்கும் முதலீட்டைச் செய்யத் தயாராக இல்லை. கடந்த டிசம்பரில் வியன்னாவில் நடந்த தமிழ் முதலீட்டாளர்களுக்கான ஒன்று கூடலில் திருகோணமலையில் முதலிடும் படி தாம் கெஞ்சியதாகவும் ஆனால் எவரும் அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் கூறினார்.
அரசு தங்களது முதலீட்டையும் காசையும் எடுக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் தரமுடியும் என தமிழ் முதலீட்டாளர்கள் கேட்டதாகவும் தான் அதற்கு விடுதலைப்புலிகள் என்ன வாக்குறுதிகளைத் தந்ததினால் நீங்கள் அவர்களுக்கு காசு கொடுத்தீர்கள் எனவும் கேட்டதாகவும் விக்னேஸ்வரன் கூறினார். தான் கேட்ட கேள்விக்கு தமிழ் முதலீட்டாளர்கள் எந்தப்பதிலையும் தரவில்லை எனவும் கூறினார்.
இறுதியாக எவரும் திருகோணமலையில் முதலீடுகளைச் செய்யவிலை என்றார் விக்னேஸ்வரன்.
இரவு கவியும் போது இளைஞர்கள் குழு ஒன்று சிறு வர்ண மற்றும் பொன் மீன்களைக் கடலில் மூழ்கிப் பிடிப்பதற்காக படகில் ஏறிக் கொண்டிருந்தார்கள்.
கருமையான சுருண்ட முடியும் அகன்ற புன்னகையும் கொண்ட பொன்னம்பலம் கடற்கரையோரச்சாலையில் வந்து கொண்டிருந்த மந்தைக் கூட்டத்தை விலக்கி தனது விடுதியில் தங்கியிருந்த ரஸ்சிய விமானப் படையின் விமானிக்கு கையசைத்தபடி வீதியில் சென்று கொண்டிருக்கிறார்.
எங்களது நாடு சண்டையில் பட்டது போதும் என நான் நினைக்கிறேன். எனக்கு தெரியும் அரசாங்கம் எங்களை நம்பப் போவதில்லை என்று இன்னும் துயரமானது என்னவென்றால் எமது மக்கள் தங்களை இன்னும் நம்பத் தொடங்கவில்லை என்பதாகும். ஆனால் போர் இல்லாத வாழ்வில் எதுவும் சாத்தியம் நாங்கள் இதை மட்டுமே இறுக்கப்பட்டுக் கொள்ளவேண்டும். போர் இல்லாத வாழ்வை என்கிறார் பொன்னம்பலம்.
(5) அபிப்பிராயங்கள்
06-11-2010, 08:10
- Posted by pranavan,
சுவாமி விவேகானந்தர் பாரீஸ் நகரிலே இருந்தபொழுது ஓய்வு எடுப்பதற்காக குதிரை வண்டியிலே தனது சிஷ்யை ஐரோப்பிய பெண்மணியுடன் பாரீஸ் நகரை வலம் வந்தார். ஒரு தெரு வழியாக ஒரு வீட்டுக்குள்ளே இருந்து இரண்டு சிறிய பையன்கள் வெளியே வந்தார்கள். அவர்களின் தோற்றம் பணக்கார வீட்டுக் குழந்தைகள் போன்று தோன்றியது. அவர்களது அம்மா அந்தக் குழந்தைகளை அழைத்து வந்தார்கள். குதிரை வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அந்தக் குழந்தைகளை கட்டிப்பிடித்து முத்தமிட்டு, தட்டிக்கொடுத்துவிட்டு மீண்டும் குதிரை வண்டியில் ஏறி ஓட்டிக்கொண்டு போனார்.“யார் அந்த சிறுவர்கள்?” என்று விவேகானந்தரின் சிஷ்யை கேட்டாள். “என்னுடய பிள்ளைகள்தான்” என்று கூறினார் குதிரை வண்டியை ஓட்டியவர். அவர்களுக்கு ரொம்ப ஆச்சரியம். “குழந்தைகளைப் பார்த்தால் ரொம்ப பணக்கார வீட்டுக் குழந்தைகள் போலத் தோன்றுகிறது. இவர் குதிரை வண்டி ஓட்டுகிறாரே என்று”. குதிரைவண்டு ஓட்டுகிறவர் திரும்பிப் பார்த்தார். பாரீஸ்லே ஒரு வங்கி பேரைச் சொல்லி ‘அந்த வங்கியை உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டடார். “ஓ கேள்விபட்டிருக்கிரோமே! ரொம்ப பெரிய வங்கி ஆச்சே அது! எங்களுக்கு கூட அந்த வங்கியிலே கணக்கு இருந்தது. ஆனா இப்பொழுது அந்த வங்கி திவாலாகி விட்டதாக தெரிகிறதே” அப்படின்னாங்க சுவாமியோட சிஷ்யை.இதைக் கேட்டுவிட்டு… அதற்கு பிறகு அந்த குதிரை வண்டியைய் ஓட்டியவர் விளக்கினார். “நான் தான் அந்த வங்கிக்குச் சொந்தக்காரன்! அந்த வங்கி இப்ப கொஞ்சம் கஷ்ட நிலைமையில்தான் இருக்கிறது. பாக்கிகள் எல்லாம் வசூல் பண்ணி கடன்களை எல்லாம் அடைக்க சிறிது நாள் ஆகும் போல தெரிகிறது. இந்த நிலைமையில் நான் மற்றவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை. சொந்த ஊரிலே ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்தேன். என் கிட்டே இருந்தது… என் மனைவி கிட்டே இருந்தது எல்லாவற்றையும் விற்று இந்த குதிரை வண்டி வாங்கி வாடகை வண்டியாக ஓட்டிக் கொண்டு இருக்கிறேன். என் மனைவியும் கொஞ்சம் சம்பாதிக்கிறாள். எங்களுடைய இரண்டு பேர் வருமானத்தில் குழந்தைகளுக்கு ஆகிற செலவுகளை சரிசெய்து கொண்டு இருக்கிறோம். பாக்கிகளை வசுல் செய்து கடன்களை அடைத்ததும் மறுபடியும் வங்கியை திறந்துவிடுவேன்!” என்றார்.சுவாமி விவேகானந்தர் இதை கேட்டுக் கொண்டு இருந்தார். மனதிற்கு மகிழ்சியாக இருந்தது. சுவாமி விவேகானந்தர் சொன்னார், “இதோ இந்த மனிதரைப் பார்? இவர்தான் சரியான வேதாந்தி. அப்படியே நடைமுறைப்டுத்தியிருக்கிறார்! பெரிய ஒரு அந்தஸ்திலே இருந்து விழுந்துவிட்டால் கூட சூழ்நிலைக்கு இரையாகிவிடவில்லை! அப்படின்னு சொல்லி ஆச்சரியப்பட்டார்!”.“எவ்வளவுதான் கஷ்டம் வந்தாலும் தன்னம்பிக்கையை தளரவிடக்கூடாது
06-11-2010, 08:10
- Posted by Nages
சுவாமி விவேகானந்தரைப்பற்றி நிறைய கதகளை அவுட்டுவிடுவதின் மூலமாக வன்னிமக்களின் அவலவாழ்வு முடிவுக்கு வரப்போவதில்லை. 75 ஐந்துகளில் ஆரம்பிக்கப்பட்ட புலி அமைப்பால் சீரளிக்கப்பட்ட எமது சமூகம் எதிர்காலத்தைப்பயத்துடன் நோக்குகிறது "அடுத்து இனி எங்களுக்கு என்ன நடக்கும் " இங்கே தன்னம்பிக்கை சராசரி வாழ்வுரிமையை நோக்கியதாக இருக்கிறதே தவிரவும் பயங்கரவாதத்தை சீர் செய்யும் நோக்கிலானதல்ல என்பதை விளக்கவேண்டிய கடப்பாடு உள்ளது. தமிழனின் உழவியல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, மேலை நாடுகளில் வாழும் மக்களின் உழத்திறனை மிகவும் பாரிசில் பிச்சை எடுக்கும் தமிழனால் புரிந்துகொள்ளமுடிவதில்லை.
06-11-2010, 08:10
- Posted by aron
நாகேஷ் உமக்கும் பிச்சைக்காரர்கலுக்கும் உல்ல தொடர்பு என்ன ? தெலிவாகக்க கூரவும்.
06-11-2010, 08:10
- Posted by இளங்கோ
என்ன அண்ணை நாகேஸ் சிங்கள குடியேற்றம் பற்றி வாய் திறக்கிறார் இல்லை.
06-11-2010, 08:10
- Posted by Rason.s
உங்கலுக்கு என்ன பிரச்சினை என்ரு தெலிவாகக் கூரவும்!பிச்சைக்காரர்கல் என்ரால் உங்கலுக்குப் பிடிக்காதா???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக